News
அஜித் ரசிகர்களை பார்த்தால் ஆட்டு மந்தைகளான்னு சந்தேகமா இருக்கு!… ஓப்பன் டாக் கொடுத்த பிரபல பத்திரிக்கையாளர்!..
Actor Ajith: தமிழில் உள்ள முன்னணி நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் அஜித். அவர் ரசிகர்களுக்காக எதுவுமே செய்யாதபோதும் கூட எப்போதுமே ரசிகர்கள் அஜித்தை கொண்டாடி வருகின்றனர். பொதுவாக அஜித் எந்த ஒரு சினிமா தொடர்பான விழாக்களுக்கும் வருவதில்லை. அதே போல விருது வழங்கும் விழாக்களுக்கும் வருவதில்லை.
இதுக்குறித்து பிரபல சினிமா பத்திரிக்கையாளர் அந்தணன் சில விஷயங்களை கூறியிருந்தார். அஜித் சினிமாவில் நல்ல பழக்கத்தில் இருந்த காலக்கட்டத்தில் ஒரு முறை ஏ.எம் ரத்னம் என்கிற தயாரிப்பாளருக்காக படம் நடித்து கொடுக்கவிருந்தார். அதற்காக 10 லட்ச ரூபாயை அட்வான்ஸ் தொகையாக அவர் கொடுத்தார்.
இந்த நிலையில் திரைப்பட ஊழியர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் இடையே ஒரு பிரச்சனை ஏற்பட்டது. இதனால் போராட்டத்தில் இறங்கினர் திரைப்பட சங்க ஊழியர்கள். இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசனும், அஜித்தும் ஊழியர்களுக்கு ஆதரவாக இருந்தனர்.

இதனால் கோபமான தயாரிப்பாளர் ஏ.எம் ரத்னம் அஜித்திடம் அட்வான்ஸ் தொகையை திரும்ப கேட்டுள்ளார். அப்போது கையில் பணம் இல்லாத அஜித் இதற்காக பல திரை பிரபலங்களிடம் அலைந்தும் பணம் கிடைக்கவில்லை. இறுதியாக ஒரு சேட் ஒருவர்தான் அவருக்கு அந்த பணத்தை கொடுத்துள்ளார்.
இதனால்தான் திரைத்துறை மீது மிகுந்த கோபத்திற்கு உள்ளானார் அஜித் என கூறுகிறார் அந்தணன். ஆனால் அதே சமயம் அஜித் ரசிகர்களுக்கும் எந்த ஒரு முக்கியத்துவமும் கொடுத்தது கிடையாது. தமிழ் சினிமாவிலேயே ரசிகர்களுக்காக ஒரு விழா கூட நடத்தாத நடிகர் அஜித் மட்டும்தான்.
அப்படி இருந்தும் கூட இவர்கள் எல்லாம் தல தல என பின்னால் சுற்றுவதை பார்க்கும்போது இவர்கள் ரசிகர்களா ஆட்டு மந்தைகளா என்கிற சந்தேகம் வருகிறது என்கிறார் அந்தணன்.
