Connect with us

அரசியலுக்கு வரவிருக்கிறாரா அஜித்!.. என்னது அந்த கட்சியா!.. கஷ்டம்தான்..

actor ajith

News

அரசியலுக்கு வரவிருக்கிறாரா அஜித்!.. என்னது அந்த கட்சியா!.. கஷ்டம்தான்..

Social Media Bar

Actor Ajith : தமிழ் சினிமாவில் அதிகமாக ரசிகர்களை கொண்ட நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் அஜித். விஜய், அஜித், சூர்யா மூவருமே ஒரே காலக்கட்டத்தில் போட்டி நடிகர்களாகதான் இருந்து வந்தனர். ஆனால் தற்சமயம் விஜய் மற்றும் அஜித் மட்டுமே போட்டி நடிகர்களாக இருந்து வருகின்றனர்.

ஒரே நாளில் அவர்களது திரைப்படங்களை வெளியிட்டு இருவரும் போட்டி போட்டு கொள்வது ரசிகர்கள் மத்தியில்தான் எப்போதும் பிரச்சனையாக முடிகிறது. இந்த நிலையில் சினிமாவை அடுத்து அரசியலில் கால் பதிக்க முடிவெடுத்துள்ளார் நடிகர் விஜய்.

அதன்படி அதற்கான பேச்சுவார்த்தைகள் போய்க்கொண்டுள்ளன. விஜய் மக்கள் இயக்கத்தை அப்படியே கட்சியாக்கிவிடலாம் என்பது விஜய்யின் விருப்பமாக இருந்தது. வருகிற நாடாளு மன்ற தேர்தலுக்கு விஜய் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ajith
ajith

ஏனெனில் நேற்றுதான் இதுக்குறித்து மீட்டிங் ஒன்றை போட்டார் விஜய். இந்த நிலையில் பத்திரிக்கையாளர் அந்தணன் கூறும்போது அஜித்தும் அரசியலுக்கு வருவதற்கான வாய்ப்புகள் தென்படுவதாக கூறுகிறார். பி.ஜே.பி கட்சியை சேர்ந்த ரங்கராஜ் பாண்டே அஜித்தின் நண்பராவார்.

அவர் அஜித்திடம் பாஜக கட்சியில் சேருவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. அப்படியிருக்கும் பட்சத்தில் விஜய் கண்டிப்பாக காங்கிரஸ் கட்சிக்குதான் ஆதரவாக இருப்பார் என நம்பப்படுகிறது. இது தேர்தல் களத்திலும் கூட இருவருக்குமிடையே போட்டியை ஏற்படுத்தப்போகிறது.

மேலும் பாஜக மீது மக்களுக்கு ஏற்கனவே அதிருப்தி இருந்து வருகிறது. ஒருவேளை அஜித் பாஜக கூட்டணியில் அரசியலுக்கு வந்தால் அது அவரது சினிமா வாழ்க்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் கருத்துக்கள் இருக்கின்றன.

To Top