News
இதை வாங்குனா 3 மாசத்துக்கு 30 படம் பார்க்கலாம் – ஆஃபர் போட்ட பி.வி.ஆர் சினிமாஸ்!
சென்னையில் பிரபலமான திரையரங்க குழுமங்களில் பி.வி.ஆர் சினிமாஸும் முக்கியமானது ஆகும்.

பி.வி.ஆர் சினிமாஸ் சென்னையின் முக்கியமான அங்கமாக இருந்து வருகிறது. அடிக்கடி சினிமா ரசிகர்களை மகிழ்விக்கும் வண்ணம் பல ஆஃபர்களை வெளியிடும் பழக்கம் பி.வி.ஆருக்கு உண்டு.
வாரிசு மற்றும் துணிவு திரைப்படத்திற்கு கூட ஏதேனும் ஆஃபர்களை இவர்கள் வெளியிடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தற்சமயம் பி.வி.ஆர் சினிமாஸ் நியூ இயரை முன்னிட்டு ஒரு ஆஃபரை வெளியிட்டுள்ளது.
பஸ் பாஸ் போல மூன்று மாதத்திற்கு ஒரு தியேட்டர் பாஸை அறிமுகப்படுத்தியுள்ளது பி.வி.ஆர். இதன் விலை 1500 ரூபாய். இதை வைத்து பி.வி.ஆர் சினிமாஸின் எந்த திரையரங்கிலும் படம் பார்த்து கொள்ளலாம். ஜனவரி, பிப்ரவரி, மார்ச் ஆகிய மூன்று மாதங்களுக்கு இந்த அட்டை செல்லும்.
அதற்குள் அதிகப்பட்சமாக 30 காட்சிகள் பார்த்துக்கொள்ளலாம். அதற்கு மேல் பார்க்க முடியாது. ஆக மாதத்திற்கு 10 படங்கள் பார்க்க முடியும். எனவே இந்த ஆஃபருக்கு வரவேற்பு கூடி வருகிறது.
