Latest News
கைதி 2 வில் வில்லனாக லாரன்ஸ் – இன்னும் எத்தனை பேர் இருக்காங்க?
இயக்குனர் லோகேஷ் கனகராஜ்க்கு ஒரு தனியான ரசிகர் பட்டாளமே உருவாகி கொண்டிருக்கிறது என கூறலாம். அந்த அளவிற்கு லோகேஷ் கனகராஜின் படங்களுக்கு வரவேற்ப்புகள் அதிகரித்து வருகின்றன.
விக்ரம் திரைப்படத்தின் வெற்றியை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்க போகும் அடுத்த படம் தளபதி 67. இதற்கு அடுத்து நடிகர் கார்த்தியை வைத்து கைதி 2 திரைப்படத்தை இயக்க உள்ளார். கைதி 2 திரைப்படமானது கார்த்தியின் முன்கதையாக இருக்கும் என அனுமானங்கள் இருந்து வந்தன.
ஆனால் படத்தில் அரை மணி நேரத்திற்குதான் கார்த்தியின் முன்கதை வரும். அதன் பிறகு தற்போதைய காலக்கட்டத்தில் நடக்கும் கதையாக கைதி 2 இருக்கும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த படத்தில் கார்த்திக்கு வில்லனாக ராகவா லாரன்ஸ் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அவர் ஏற்கனவே சந்திரமுகி 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் வேட்டையன் ராஜா கதை வருவதாகவும் அதில் லாரன்ஸ் வேட்டையன் ராஜாவாக நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் கைதி 2 விலும் அவர் வில்லனாக நடிக்கிறார். ரோலக்ஸ் கதாபாத்திரத்திற்கு வேலை செய்யும் கதாபாத்திரமாக இவர் இருப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.