News
உங்க தலைவரு வீட்டுக்குள்ள போங்க!.. ரஜினிக்காக கூடிய கூட்டத்தை வெளுத்து வாங்கிய பெண்!..
Rajinikanth Pongal : தமிழ் சினிமாவில் அதிகமான ரசிகப்பட்டாளத்தை கொண்ட நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் ரஜினிகாந்த். ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படங்களுக்கு எப்போதுமே மக்கள் மத்தியில் வரவேற்பு குறையாமல் இருந்து வருகிறது.
இதனால் அவரது ரசிகர்கள் ரஜினிகாந்தை நேரில் பார்ப்பது அவர்களுக்கு பெரும் வரம் என கருதுகின்றனர். பொதுவாக ரசிகர்கள் என்றாலே அவர்களது நடிகர்களை ஒரு முறையாவது நேரில் பார்த்துவிட வேண்டும். ஒரு போட்டோவாவது எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுவார்கள்.
இதனால்தான் ராகவா லாரன்ஸ் விஜய் சேதுபதி போன்ற நடிகர்கள் தங்களது ரசிகர்கள் எங்கே சந்தித்தாலும் அவர்களுடன் நின்று ஒரு போட்டோ எடுத்துக் கொண்டு செல்வதுண்டு. ஆனால் அப்படியான விஷயத்தை ரஜினிகாந்த் எப்போதுமே செய்தது இல்லை.

ரஜினிகாந்தின் பிறந்த நாளின் பொழுதும் மற்ற விழாக்களின் போதும் ரஜினிகாந்தை பார்ப்பதற்கு ஒரு பெரும் கூட்டம் அவரது வீட்டு வாசலில் வந்து நிற்கும். அப்பொழுது ரஜினிகாந்த் மாடியில் மேல் நின்று அவர்களுக்கெல்லாம் கையசைத்து விட்டு வீட்டுக்குள் செல்வாரே தவிர ஒருமுறை கூட அவர்களை அழைத்து போட்டோ எடுத்துக் கொண்டது கிடையாது.
இந்த நிலையில் இதனால் ரஜினிகாந்தின் வீட்டிற்கு அருகாமையில் இருப்பவர்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். நேற்று பொங்கலை முன்னிட்டு இதேபோல ரஜினிகாந்த்தை சந்திக்க ஒரு பெரும் கூட்டம் வந்து நின்ற பொழுது பக்கத்து வீட்டில் இருந்த பெண் இதனால் மிகவும் கடுப்பாகிவிட்டார்.
அவர் இது குறித்து பேசும் பொழுது உங்கள் ரஜினிகாந்தை வீட்டிற்குள் அழைத்து உங்களிடம் பேச சொல்லுங்கள் பேச மாட்டார். அவருக்காக போய் இப்படி எல்லாம் நின்று கொண்டிருக்கிறீர்களே ஒரு நல்ல நாளில் நாங்கள் பூஜை செய்து சாமி கும்பிட முடிகிறதா வெளியில் நின்று இப்படி கத்தி கொண்டிருந்தால் நாங்கள் எப்படி விழாவை கொண்டாட முடியும் என்று பேசியிருக்கிறார் அந்தப் பெண் இதனை அடுத்து அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
