இயக்குனர் பாக்கியராஜுடம் உதவி இயக்குனராக இருந்து பிறகு இயக்குனராக பிரபலமானவர் பாண்டியராஜ். அவர் இயக்கிய கன்னிராசி, ஆண்பாவம் போன்ற படங்கள் ஆரம்பத்தில் பெரும் வரவேற்பை பெற்று கொடுத்தன. அதனை தொடர்ந்து அவரது மார்க்கெட் என்பதும் கூட எக்கச்சக்கமாக அதிகரித்தது.
இந்த நிலையில் தொடர்ந்து காமெடி படங்களாக இயக்கி வந்த பாண்டியராஜ் ஒரு கட்டத்திற்கு பிறகு பாண்டியராஜ் திரைப்படங்களில் நடிக்கவும் துவங்கினார். அந்த வகையில் அவருக்கு நடிகராகவும் அதிக வரவேற்புகள் கிடைத்து வந்தன.
தற்சமயம் திரைப்படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அஞ்சாதே திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அதிலும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தார் பாண்டியராஜ். அவர் ரஜினியை சந்தித்த அனுபவம் குறித்து ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

அதில் கூறும்போது ஒரு நாள் விமான நிலையத்தில் டிக்கெட் எடுக்க நான் லைனில் நின்று கொண்டிருந்தேன். அப்போது இரவு 3 மணி இருக்கும். அந்த சமயத்தில்தான் வேறு விமானத்தில் இருந்து இறங்கி ரஜினிகாந்த் சென்று கொண்டிருந்தார்.
என்னை பார்த்ததும் அவர் கையை காட்டினார். பிறகு அங்கிருந்த விமான அதிகாரியிடம் ஏதோ பேசிவிட்டு சென்றார். பிறகு 10 மணி போல எனக்கு போன் செய்தார். என்னை மன்னித்துவிடுங்கள் பாண்டியராஜ் உங்களை விமான நிலையத்தில் அப்படி விட்டு விட்டு வந்திருக்க கூடாது. நான் அதிகாரிகளிடம் உங்களை முன்னால் விடும்படி கூறினேன். அவர்கள் அனுமதிக்க வில்லை என கூறினார்.
என்னிடம் ஒரு மனிதர் அப்படி மன்னிப்பு கேட்க என்ன அவசியம் இருக்கிறது. அதுதான் ரஜினி சார் என கூறியுள்ளார் பாண்டியராஜ்.