Connect with us

எனக்கு பாரதிராஜா 100 ரூபாய் தரணும்.. பல வருடம் ஆகியும் மறக்காமல் கூறிய ரஜினிகாந்த்!..

bharathiraja rajinikanth

Cinema History

எனக்கு பாரதிராஜா 100 ரூபாய் தரணும்.. பல வருடம் ஆகியும் மறக்காமல் கூறிய ரஜினிகாந்த்!..

Social Media Bar

Bharathiraja and Rajinikanth : தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் முதல் இடத்தில் இருப்பவர் ரஜினிகாந்த். ரஜினிகாந்த் நடிக்கும் பெரும்பாலான படங்கள் ப்ளாக்பஸ்டர் ஹிட் கொடுத்துள்ளன. அந்த வகையில் இப்போதும் வரவேற்பு குறையாத ஒரு நடிகராக இருந்து வருகிறார் ரஜினி.

ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்சமயம் ஜெய்பீம் இயக்குனர் ஞானவேலோடு அடுத்த படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். ஆரம்பக்கட்டத்தில் சினிமாவிற்கு வந்தப்போது மிகவும் கஷ்டப்பட்டார் ரஜினிகாந்த். ரஜினிகாந்த் சினிமாவிற்கு வாய்ப்பு தேடி வந்தப்போது 100 ரூபாய் காசு அவருக்கு பெரிய விஷயமாக இருந்தது.

ஏனெனில் தங்குவதற்கும் உணவுக்கும் கூட வழியில்லாமல்தான் அவர் சினிமாவில் வாய்ப்புகளை தேடி வந்தார். இந்த நிலையில் அவருக்கு ஒரு சில திரைப்படங்களில் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் சில படங்களில் அவருக்கு சம்பளமே கொடுக்காமல் ஏமாற்றிவிட்டனர்.

எனவே இனி பாதி சம்பளத்தை முதலிலேயே பேசிவிட்டுதான் நடிக்க வேண்டும் என முடிவு செய்தார் ரஜினிகாந்த். இந்த நிலையில்தான் பாரதிராஜா இயக்கிய 16 வயதினிலே திரைப்படத்தில் பரட்டை என்கிற கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு வாய்ப்பை பெற்றார் ரஜினி.

அதில் நடிப்பதற்கு 2000 ரூபாய் சம்பளம் பேசப்பட்டது. முன் தொகை வாங்கிக்கொண்டு ரஜினிகாந்த் அதில் நடிக்க துவங்கினார். அவருக்கு கொஞ்சம் கொஞ்சமாக சம்பளத்தை வழங்கிவந்த பாரதிராஜா இறுதிவரை அதில் 100 ரூபாயை மட்டும் கொடுக்கவில்லையாம்.

இந்நிலையில் ஒருமுறை ஐஸ்வர்யாராயை பார்க்க ஆசைப்பட்ட மனோஜ் பாரதிராஜா, எந்திரன் திரைப்படத்தின் படப்பிடிப்பிற்கு சென்றுள்ளார். அங்கு அவரை ஐஸ்வர்யா ராயிடம் அறிமுகப்படுத்திய ரஜினிகாந்த், இவர் பாரதிராஜாவின் பையன், இவரது அப்பா எனக்கு 100 ரூபாய் சம்பள பாக்கி வைத்துள்ளார் என கூறியுள்ளார் ரஜினிகாந்த்.

To Top