Cinema History
அந்த இயக்குனரை நான் பார்த்தே ஆகணும்.. இயக்குனரை ஆள் வைத்து தேடிய ரஜினிகாந்த்!.. என்ன விஷயம்?.
Actor Rajinikanth : பெரும் நடிகராக இருந்தாலும் கூட ரஜினிகாந்திடம் எப்போதுமே ஒரு நல்ல பழக்கம் உண்டு. அது என்னவென்றால் சின்ன சின்ன பிரபலங்களை அழைத்து பாராட்டுவது அவரது வழக்கமாகும்.
ஏதாவது ஒரு திரைப்படத்தை பார்த்து அந்த திரைப்படம் சிறப்பாக இருந்தது என்றால் அவர்களை அழைத்து பாராட்டுவதை வழக்கமாக வைத்திருந்தார் ரஜினிகாந்த். சமீபத்தில் கூட லவ் டுடே திரைப்படம் பெரும் வெற்றியை கொடுத்தபோது பிரதீப் ரங்கநாதனை அழைத்து அவருக்கு மரியாதை செய்து இருந்தார் ரஜினிகாந்த்.

அதே போல நடிகர் எம் எஸ் பாஸ்கர் மீது அதிக மரியாதை கொண்டிருந்தார் ரஜினிகாந்த். எம்.எஸ் பாஸ்கரின் நடிப்பு ரஜினிகாந்திற்கு மிகவும் பிடிக்கும் என கூறலாம். இது குறித்து எம்.எஸ் பாஸ்கர் ஒரு பேட்டியில் கூறும்பொழுது குரு என் ஆளு என்கிற திரைப்படத்தில் ஒரு கூடை சன் லைட் என்கிற ரஜினிகாந்தின் பாடலை வைத்து விவேக்கும் எம்.எஸ் பாஸ்கரும் ஒரு பாடல் செய்திருப்பார்கள்.
போன் செய்து வாழ்த்திய ரஜினிகாந்த்:
அதை பார்த்து விழுந்து விழுந்து சிரித்த ரஜினிகாந்த் எம்.எஸ் பாஸ்கருக்கு போன் செய்து அப்படியே என்னை பார்த்த மாதிரியே இருந்தது என்று கூறியிருக்கிறார். அதேபோல எட்டு தோட்டாக்கள் திரைப்படம் வெளியான பொழுது அதை பார்த்த ரஜினி எம்.எஸ் பாஸ்கருக்கு போன் செய்து எவ்வளவு சிறப்பான ஒரு நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறீர்கள் என்று அவரை பாராட்டி இருக்கிறார்.

மேலும் அந்த படத்தின் இயக்குனரிடம் கண்டிப்பாக நான் பேசிய ஆக வேண்டும். வெகு நாட்களாக அவரது நம்பரை பலரிடம் கேட்டு வந்தேன் ஆனால் யாரும் கொடுக்கவில்லை என்று ரஜினி கூறவே எம்.எஸ் பாஸ்கர் அவரது நம்பரை வழங்கி உள்ளார். பிறகு அவருக்கும் அழைப்பு விடுத்து வாழ்த்தியிருக்கிறார் ரஜினிகாந்த் இந்த சம்பவங்களை ஒரு பேட்டியில் பகிர்ந்திருக்கிறார் எம்.எஸ் பாஸ்கர்.
