News
மீண்டும் போலீஸாக களம் இறங்கும் ரஜினிகாந்த்!.. லீக் ஆன தலைவர் 171 கதை!..
பொதுவாகவே தமிழ் சினிமாவில் போலீஸ் திரைப்படங்களுக்கு என்று ஒரு மதிப்பு உண்டு. ஒவ்வொரு நடிகரும் ஒருமுறையாவது போலீஸாக படம் நடித்துவிட வேண்டும் என ஆசைப்படுவதுண்டு. அதே போல தமிழ் சினிமாவில் பெரும்பாலும் போலீஸ் திரைப்படங்கள் வெற்றி திரைப்படங்களாகதான் அமைந்துள்ளன.
இந்த நிலையில் தொடர்ந்து நான்ஸ்டாப்பாக போலீஸ் திரைப்படமாக நடித்து வருகிறார் ரஜினிகாந்த். தர்பார் திரைப்படத்தில் துவங்கி தொடர்ந்து போலீஸ் படங்கள் கதையாகதான் இவருக்கு கதை வருகிறது. தர்பார் திரைப்படத்தில் மும்பை சிட்டியின் கமிஷனராக நடித்திருப்பார்.
அதற்கு பிறகு வந்த அண்ணாத்த திரைப்படத்தில் மட்டும் போலீஸாக நடிக்கவில்லை. அதற்கு பிறகு வந்த ஜெயிலர் திரைப்படத்தில் ஓய்வு பெற்ற ஜெயிலர் அதிகாரியாக நடித்திருந்தார். இந்த நிலையில் தற்சமயம் நடித்து வரும் வேட்டையன் திரைப்படத்திலும் கூட போலீஸாகதான் நடித்து வருகிறார் ரஜினி.

இந்த நிலையில் அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இவர் நடிக்க போகும் திரைப்படம் குறித்து சில சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பிட்ட நேரத்திற்குள் நடக்கும் ஒரு சம்பவம்தான் இந்த படத்தின் மொத்த கதை என கூறப்படுகிறது.
எனவே ஒரு நாளுக்குள் நடக்கும் கதைதான் படத்தின் கதையாக இருக்கும் என கூறப்படுகிறது. இதில் ரஜினி ஓய்வு பெற்ற காவல் அதிகாரியாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பிட்ட நேரத்திற்குள் ஒரு பிரச்சனையை சரி செய்ய வேண்டும். இல்லை என்றால் பெரும் அழிவு ஏற்படும் என்கிற நிலையில் அதை சரி செய்ய ஒரு காலத்தில் பிரபலமாக இருந்த காவல் அதிகாரியை அணுகுகின்றனர் அவர்தான் ரஜினி. எனவேதான் படத்தின் போஸ்டர்களில் கூட கடிகாரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன என கூறப்படுகிறது.
மேலும் இந்த படத்தில் ரஜினிகாந்த் பெயர் என்னவாக இருக்குமோ அதுவே படத்தின் பெயராக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
