News
வேட்டையன் படத்தில் ப்ளாஸ்பேக்கில்தான் ரஜினி போலீஸா… லீக்கான புதிய வீடியோ!..
Rajinikanth: தற்சமயம் ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படங்களுக்கான படப்பிடிப்பு என்பது அதிக நாட்களை எடுத்துக்கொள்கிறது. முன்பெல்லாம் வருடத்திற்கு இரண்டு படங்கள் நடிப்பார் ரஜினிகாந்த். ஆனால் தற்சமயம் அவருக்கு அதிகமாக வயதானதால் அந்த அளவிற்கு நடிக்க முடிவதில்லை.
இதனால் அவரை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கி முடிக்கவே 8 முதல் 9 மாதங்கள் வரை தேவைப்படுகிறது. இந்த நிலையில் ஏற்கனவே ஜெயிலர் திரைப்படமே கிட்டத்தட்ட 8 மாதங்கள் வரை எடுக்கப்பட்டு வந்தது. அதற்கு பிறகு ரஜினி நடிக்கும் வேட்டையன் திரைப்படத்தின் படப்பிடிப்பும் வெகு நாட்களாக நடந்து வருகிறது.
கிட்டத்தட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கியும் 8 மாதங்கள் ஆகிவிட்டன. தீபாவளிக்காவது படம் வருமா என்பது கேள்விக்குறிதான் என கூறப்படுகிறது. இந்த நிலையில் போலி என்கவுண்டர்களுக்கு எதிராகதான் இந்த திரைப்படம் எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.

என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டாக இருக்கும் ரஜினிகாந்த் தனது இளமை வாழ்க்கையில் தெரியாமல் ஒரு அப்பாவியை கொன்று விட அது தொடர்பான விஷயங்களை வெகு தாமதமாக கண்டறிவது போல கதை அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த கதையில் இளமைக்கால போலீஸ் கெட்டப்பில் ரஜினிகாந்த் நேற்று படப்பிடிப்பிற்கு வந்திருக்கிறார். இந்த நிலையில் அங்கிருந்த ரஜினி ரசிகர்கள் உடனே அவரை வீடியோ எடுத்துள்ளனர். அதில் காட்டப்பட்டுள்ள போலீஸ் உடையை பார்க்கும்போது அது பழைய காலத்து போலீஸ் உடை போல தெரிகிறது.
எனவே படத்தில் ரஜினிகாந்த் மூன்று முகம் அலெக்ஸ் பாண்டியன் லெவலில் இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
