இன்னும் எவ்வளவு தூரம்தான் ஓடுறது…. சூப்பர் ஸ்டாரால் அவதிக்குள்ளாகும் சிவகார்த்திகேயன்!..
தமிழில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவராக நடிகர் சிவகார்த்திகேயன் இருக்கிறார். தொடர்ந்து சிவகார்த்திகேயன் வெற்றி படங்களாக கொடுத்து வருகிறார். தற்சமயம் அதன் மூலம் தனது சம்பளத்தையும் அவர் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
2017 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடித்து தயாரித்த திரைப்படம் அயலான். கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகியும் அந்த திரைப்படம் இன்னும் வெளியாகாமல் இருக்கிறது. ஏனெனில் படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் ஆகும்.
அந்த திரைப்படத்தை முடிப்பதற்கு சிவகார்த்திகேயனுக்கு அதிக காலங்கள் தேவைப்பட்டது. தற்சமயம் அந்த படத்தின் முக்கால்வாசி வேலைகள் முடிந்த நிலையில் அதை வெளியிடுவதில் அதிக பிரச்சனைகளை சந்தித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

இந்த திரைப்படத்தை வருகிற தீபாவளி அன்று வெளியிட திட்டமிட்டு இருந்தார் சிவகார்த்திகேயன் ஆனால் இப்பொழுது கார்த்திக் நடிக்கும் ஜப்பான் என்கிற திரைப்படம் வெளியாக இருக்கிறது. ஏற்கனவே கார்த்தியோடு போட்டி போட்டு சர்தார் திரைப்படம் வெளியான பொழுது சிவகார்த்திகேயன் அவர் நடித்த பிரின்ஸ் திரைப்படத்தை வெளியிட்டார்.
ஆனால் சர்தார் திரைப்படம்தான் நல்ல வெற்றியை கண்டது. எனவே மீண்டும் கார்த்தியோடு போட்டி போட வேண்டாம் என்று அயலான் திரைப்படத்தை பொங்கல் அன்று வெளியிடலாம் என்று முடிவு செய்திருந்தார் சிவகார்த்திகேயன்.
ஆனால் தற்சமயம் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்துள்ள லால் சலாம் திரைப்படத்தை அதே நாளில் வெளியிட திட்டமிட்டுள்ளது லைக்கா நிறுவனம். ஏற்கனவே ஏகப்பட்ட பிரச்சனைகளுக்கு நடுவே அந்த திரைப்படத்தை வெளியிடும் சிவகார்த்திகேயன் நேரடியாக ரஜினியோடு போட்டி போடுவது கடினமான காரியமாகும்.
இருந்தாலும் அந்த திரைப்படத்தில் ரஜினி ஒரு பத்து நிமிட காட்சிகளுக்கு மட்டுமே வருகிறார் என்றும் அதனால் சிவகார்த்திகேயன் திரும்பவும் தேதியை மாற்ற மாட்டார் என்றும் பேச்சுகள் உள்ளன.
