Tamil Cinema News
வீட்ல எனக்கு மட்டும் வன்மம் தீத்துட்டாங்க..! கேள்விப்படாத சம்பவமா இருக்கே… ஆர்.ஜே பாலாஜிக்கு நடந்த சம்பவம்.!
காமெடி நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இப்போது திரைப்படங்கள் இயக்குவது வரை முன்னேறி இருப்பவர் நடிகர் ஆர்.ஜே பாலாஜி. அவர் எப்போதுமே காமெடியாக பேசக்கூடிய நபராக இருக்கிறார். தற்சமயம் நடிகர் சூர்யாவை வைத்து திரைப்படம் இயக்குகிறார் ஆர்.ஜே பாலாஜி.
இந்த படம் எப்படியும் காமெடி படமாகதான் இருக்கும் என தெரிகிறது. எனவே இந்த படம் குறித்து எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் ஆர்.ஜே பாலாஜி அவரது வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை பகிர்ந்துள்ளார்.
ஆர்.ஜே பாலாஜிக்கு நடந்த நிகழ்வு:
ஆர்.ஜே பாலாஜி 11 ஆம் வகுப்பு படிக்கும்போது அவருக்கு தம்பி பிறந்துள்ளார். தம்பி பிறந்தப்பிறகு ஒருநாள் ஆர்.ஜே பாலாஜி அம்மா அவருக்கு போன் செய்து தம்பிக்கு பில் க்ளிண்டன் என பெயர் வைக்க போகிறோம் என கூறியிருக்கின்றனர்.
அதை கேட்டு ஆர்.ஜே பாலாஜி அதிர்ச்சியடைந்துள்ளார். அப்படியெல்லாம் பெயர் வைக்க கூடாது என கூறியுள்ளார். ஏனெனில் அவருக்கு மட்டும் ஆர்.ஜே பாலாஜி என பழைய பெயரை வைத்திருந்தனர்.
ஆனால் வீட்டில் உள்ளவர்கள் அதை கேட்கவில்லை. இறுதியாக அவரது தம்பிக்கு ரித்திக் ரோஷன் என பெயர் வைத்துள்ளனர். இந்த விஷயத்தை ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார் ஆர்.ஜே பாலாஜி.
