Connect with us

சேற்ற வாரி இறைச்ச இடத்துலையே சரி பண்ணுங்க.. நீங்கதான் அம்பானி பேமிலியாச்சே!.. ஆன்ஃபயரில் சமுத்திரக்கனி!. இன்னமும் அடி வாங்கும் ஞானவேல்ராஜா!..

samuthrakani gnanavelraja

News

சேற்ற வாரி இறைச்ச இடத்துலையே சரி பண்ணுங்க.. நீங்கதான் அம்பானி பேமிலியாச்சே!.. ஆன்ஃபயரில் சமுத்திரக்கனி!. இன்னமும் அடி வாங்கும் ஞானவேல்ராஜா!..

Social Media Bar

Director Samuthrakani paruthiveeran :  கடந்த சில நாட்களாக மக்கள் மத்தியில் வெகுவாக பேசப்பட்டு வரும் விஷயமாக பருத்திவீரன் திரைப்பட பிரச்சனை இருந்து வருகிறது. தயாரிப்பாளர் ஞானவேலராஜா தயாரிப்பில், அமீர் இயக்கத்தில் கார்த்தி நடித்து உருவான திரைப்படம் பருத்திவீரன்.

இந்த திரைப்படம் இவர்கள் மூவருக்குமே முக்கியமான திரைப்படமாக அமைந்தது. இந்த திரைப்படத்தின்போதே அமீருக்கும் ஞானவேல்ராஜாவிற்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. பண விவகாரத்தால் ஏற்பட்ட இந்த பிரச்சனையின் காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர்.

paruthiveeran
paruthiveeran

இந்த நிலையில் ஒரு பேட்டியில் தற்சமயம் பேசிய ஞானவேல்ராஜா அமீரை மிகவும் தாழ்வாக பேசியிருந்தார். இதனை தொடர்ந்து இயக்குனர் சசிக்குமார், சமுத்திரக்கனி, பாரதிராஜா நடிகர் பொன்வண்ணன் ஆகியோர் அமீருக்கு ஆதரவாக அணி திரண்டனர்.

இதனையடுத்து தனது பேட்டிக்கு வருந்துவதாக தெரிவித்திருந்தார் ஞானவேல்ராஜா. இதற்கு பதிலளித்த சமுத்திரக்கனி தனது டிவிட்டர் பதிவில் “இந்த வருத்தம் தெரிவிக்கிற சீனெல்லாம் இங்க செல்லாது, பொது வெளியில் உட்கார்ந்துக்கிட்டு எங்க சேற்ற வாரி இறைச்சீங்களோ.. அதே பொது வெளியில் பகிரங்கமா மன்னிப்பு கேக்கணும்.

அதே போல நீங்க கொடுக்காம ஏமாத்திட்டு போன பணத்தை திருப்பி கொடுக்கணும். படத்துல வேலை பார்த்தவங்களுக்கும் சம்பள பாக்கி இருக்கு அவங்க எல்லாம் கஷ்டபடும் குடும்பத்தை சேர்ந்தவங்க, நீங்கதான் அம்பானி பேமிலியாச்சே என பேசியுள்ளார் சமுத்திரக்கனி.

To Top