Tamil Cinema News
குளத்தில் கிழிந்த மேலாடை…. ஒரே அசிங்கமா போச்சு குமாரு! மறக்கவே முடியாத நிகழ்வை பகிர்ந்த ஷகீலா!
திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஷகீலா. இவர் நடித்த முதல் படமே அடல்ட் படமாக, இவருக்கு அடல்ட் நடிகை முத்திரை குத்தப்பட்டது.
இந்த நிலையில், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் என்ட்ரிக்கு பிறகு, மக்கள் மத்தியில் ஷகீலாவிற்கு அதிக அன்பு கிடைத்தது. இந்த நிகழ்ச்சியில் புகழ், குரேஷி உள்ளிட்ட பலரும் ஷகீலாவை மம்மி மம்மி என்று அழைத்ததனால், மல்கோவா மாமியான இவர், மக்கள் மத்தியில் மம்மியாக பிரபலம் அடைந்தார். இந்த நிகழ்ச்சியின் மூலம் ஷகீலாவுடைய அடையாளமே மாறியது.
இந்த நிலையில், நடிகை ஷகீலா சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய விஷயங்கள் வைரலாகி வருகிறது.
நடிகை சில்க் ஸ்மிதா நடித்த படத்தில்தான் தானும் சினிமாவில் அறிமுகமானதாகவும், அந்த சமயத்தில் தனக்கு வெறும் 16 வயது தான் ஆனதாகவும், அப்போது நீச்சல் தெரியாத தன்னை நீச்சல் குளத்தில் குதிக்க சொல்லிய போது, தண்ணீருக்குள் மாறிவிட்டதாக கூறிய சகிலாவுக்கு மேல வர தெரியவில்லை.

அப்போது படப்பிடிப்பில் இருந்து ஒரு நபர் உடனடியாக நீச்சல் குளத்தில் குதித்து அவரை மேலே கொண்டு வந்துள்ளார். ஆனால், அப்போது ஷகீலா அணிந்திருந்த பிகினி உடையின் மேலாடை கிழிந்துவிட்டது. தண்ணீருக்கு மேலே வரும்போது, ஷகீலாவின் மேலாடை இல்லை. இந்த சம்பவம் நடந்த நேரத்தில், பக்கத்தில் நிகழ்ச்சி ஒன்று நடந்துகொண்டு இருந்தது. அதனால் படப்பிடிப்பு நடந்த இடத்தில் 300 பேர் இருந்தார்கள். அவர்கள் அனைவருமே ஷகீலாவை பார்க்க, அவருக்கு மிகவும் அவமானமாகிவிட்டதாகவும் அந்த சம்பவத்தை என் வாழ்க்கையில் மறக்கவே முடியாது எனவும் கூறியுள்ளார் நடிகை ஷகீலா.
