Cinema History
படம் எனக்கு திருப்தியா இல்லை.. ஹீரோவை மாத்துங்க!.. சிவாஜி படத்தில் நடந்த சம்பவம்!..
தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர் சிவாஜி காலக்கட்டத்திற்கு முன்பே வித்தியாசமான திரைப்படங்கள் எடுத்த இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் எஸ்.பாலச்சந்தர். அவர் இயக்கிய அவனா இவன், பொம்மை போன்ற திரைப்படங்கள் தமிழில் பெரும் வெற்றியை கொடுத்துள்ளன.
ஹாலிவுட்டில் பிரபலமாக இருந்த க்ரைம் த்ரில்லர் நாவலை அப்போதே படமாக்கியவர் எஸ். பாலச்சந்தர். நடு இரவில் என்கிற பெயரில் அந்த படம் வெளியானது. இந்த நிலையில் அவர் இயக்கிய மற்றொரு திரைப்படம் அந்த நாள்.
கிட்டத்தட்ட இந்த திரைப்படமும் ஒரு க்ரைம் திரைப்படம்தான். இந்த படத்தில் மிக வித்தியாசமாக படத்தின் முதல் காட்சியிலேயே கதாநாயகன் இறந்துவிடுவார். அவரை யார் கொலை செய்தார்கள் என்பதே கதை. இந்த படத்தில் கொலை செய்யப்பட்டவராக சிவாஜி கணேசன் நடித்திருப்பார்.
ஆனால் இந்த படத்தை இயக்க துவங்கியப்போது இதில் சிவாஜி கணேசனை நடிக்க வைக்கவில்லை. வேறு ஒரு நடிகரை வைத்துதான் படப்பிடிப்பு எடுக்கப்பட்டது. முக்கால்வாசி திரைப்படம் முடிந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளர். ஏ.வி மெய்யப்ப செட்டியார் படத்தை பார்த்துள்ளார்.
படம் ஹாலிவுட் அளவிற்கு பாடல், காமெடி காட்சிகள் இல்லாமல் உருவாக்கப்பட்டிருந்தாலும் அதில் கதாநாயகனின் நடிப்பு ஏ.வி. மெய்யப்ப செட்டியாருக்கு திருப்தியாக இல்லை. இதில் சிவாஜி கணேசன் நடித்தால் நன்றாக இருக்கும் என நினைத்தார் ஏ.வி.எம்.
ஆனால் பிரச்சனை என்னவென்றால் பராசக்தி படத்தின்போதே சிவாஜிக்கும் ஏ.வி.எம்மிற்கும் பிரச்சனை இருந்தது. இருந்தாலும் ஒருமுறை சிவாஜியிடம் கேட்கலாம் என கேட்டப்போது உடனே ஒப்புக்கொண்டு நடித்து கொடுத்துள்ளார் சிவாஜி கணேசன்.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்