Connect with us

அயலான் தெலுங்கில் வெளியாகாமல் போனதுக்கு ஷாருக்கான்தான் காரணம்!.. நேரம் பார்த்து காலை வாரிய ஷாருக்!..

sivakarthikeyan sharukhkhan

News

அயலான் தெலுங்கில் வெளியாகாமல் போனதுக்கு ஷாருக்கான்தான் காரணம்!.. நேரம் பார்த்து காலை வாரிய ஷாருக்!..

Social Media Bar

Sivakarthikeyan: தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவராக நடிகர் சிவகார்த்திகேயன் இருந்து வருகிறார். சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்களுக்கு இளைஞர்களை விடவும் சிறுவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

எனவே சிவகார்த்திகேயனுக்கும் குழந்தைகள் பார்க்கும் விதத்திலேயே திரைப்படங்களில் நடிக்கிறார். இதனால் அதிக வன்முறை காட்சிகள் மற்றும் கவர்ச்சி காட்சிகள் இல்லாமல் இருக்கின்றன சிவகார்த்திகேயன் திரைப்படங்கள்.

சிவகார்த்திகேயன் பெரும் எதிர்பார்ப்புடன் சம்பளமே வாங்காமல் நடித்து வந்த திரைப்படம் அயலான். இந்த படத்தின் பட்ஜெட் காரணமாக இது வெளியாவதற்கு பல நாட்கள் ஆனது. சில வருடங்களாக உருவாகி வந்த அயலான் திரைப்படம் ஜனவரி 12 அன்று திரையரங்குகளில் வெளியானது.

ayalaan
ayalaan

எதிர்பார்த்த அளவு இந்த படம் வெற்றியை கொடுத்தது, முக்கியமாக குழந்தைகள் கொண்டாடும் திரைப்படமாக அயலான் இருந்தது. ஆனால் தெலுங்கில் மட்டும் இந்த படம் இன்னும் வெளியாகவில்லை. தெலுங்கு டப்பிங் வேலைகள் வரை முடிந்த நிலையில் இந்த படம் தெலுங்கில் வெளியாகாமல் போனதற்கு ஷாருக்கான்தான் காரணம் என கூறப்படுகிறது.

இந்த படத்தின் டி.ஐ வேலைகளை ஷாருக்கானின் ரெட் சில்லீஸ் நிறுவனம்தான் செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் படம் வெளியாகும் தருவாயில் ரெட் சில்லீஸிற்கு கொடுக்க வேண்டிய தொகையில் பாக்கி இருந்ததாக கூறப்படுகிறது.

படத்தின் தெலுங்கு ரிலீஸின் போது பாக்கி பணத்தை தந்துவிடுவதாக தயாரிப்பு பக்கத்தில் இருந்து கூறியுள்ளனர். ஆனால் தெலுங்கில் அயலான் ரிலீஸ் ஆகவிருந்த சமயத்திலும் அந்த தொகையை இவர்கள் தராததால் அதன் வெளியீட்டில் பிரச்சனை செய்து பட ரிலீஸை தடுத்துவிட்டாராம் ஷாருக்.

தற்சமயம் இதுக்குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

To Top