காமெடி பண்றவன் தானேன்னு குறைச்சி எடை போட்டுடாதீங்க!.. கெத்து காட்டிய சிவகார்த்திகேயன்!.

விஜய் டிவியில் காமெடி தொகுப்பாளராக இருந்து தற்சமயம் தமிழ் சினிமாவின் மிகப்பெரும் கதாநாயகனாக இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். பொதுவாக சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படங்கள் எல்லாம் ஆரம்பத்தில் காமெடி திரைப்படங்களாகதான் இருந்தன.

மனம் கொத்தி பறவை, எதிர் நீச்சல், ரஜினி முருகன் என பல படங்கள் காமெடி படங்களாகவே இருந்தன. இப்போதுதான் கனா, டாக்டர் மாதிரியான படங்களில் கொஞ்சம் சீரியஸாக நடித்துள்ளார் சிவகார்த்திகேயன். மேலும் அடுத்து நடிக்க போகும் அமரன் திரைப்படத்திலும் கூட சீரியஸாகவே நடிக்க உள்ளார் சிவகார்த்திகேயன்.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் சூரியோடு நிறைய படங்களில் நடித்துள்ளார். சூரிக்கும் இவருக்கும் நல்ல நட்பு உண்டு. எனவே சூரி, சசிக்குமார் சேர்ந்து நடிக்கும் கருடன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்திருந்தார் சிவகார்த்திகேயன்.

sivakarthikeyan
sivakarthikeyan
Social Media Bar

அவர் அதில் பேசும்போது, “சூரியுடன் நான் படங்கள் நடிக்கும் போது எல்லாம் அவரை கதாநாயகனாக பலமுறை நடிக்க சொல்லியுள்ளேன். ஆனால் அவர் இப்பவே நல்லாதான்பா போயிட்டு இருக்கு என கூறுவார். பிறகு ஒரு நாள் அவரே வந்து தம்பி எனக்கு கதாநாயகனா நடிக்க வாய்ப்பு கிடைச்சிருக்கு.

வெற்றிமாறன் படம். ஆனா நடிக்குறதுக்கு பயமா இருக்கு என கூறினார். அண்ணே கண்ணை மூடிக்கிட்டு நடிச்சி கொடுத்து வாங்கன்னு சொன்னேன். அதுல நடிக்குறது ஓ.கே தம்பி அதுக்கு பிறகு பட வாய்ப்பு வருமான்னு கேட்டார்.

ஆனால் வரிசையா எத்தனை படத்தில் நடிச்சிட்டார் பாருங்க. காமெடி பண்ற நடிகரால் எல்லா விதமான நடிப்பையும் வெளிப்படுத்த முடியும்னு சூரி அண்ணே காட்டியிருக்காரு” என பேசியிருந்தார் நடிகர் சிவகார்த்திகேயன். சிவகார்த்திகேயனும் கூட காமெடியனாக இருந்து சினிமாவில் உச்சத்தை தொட்டவர் என்பதால் அதை கொஞ்சம் பெருமிதத்தோடுதான் கூறியிருந்தார் சிவகார்த்திகேயன்.