Tamil Cinema News
2 வருஷமாச்சு.. அந்த பழக்கத்தை விட்டுட்டேன்.. இப்ப நிம்மதியா இருக்கேன்.. ஓப்பன் டாக் கொடுத்த சிவகார்த்திகேயன்.
சின்ன திரை மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இப்போது தமிழில் உள்ள டாப் நடிகர்களில் முக்கியமானவராக மாறியிருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். தனுஷ் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான சிவகார்த்திகேயன் தொடர்ந்து காமெடி கதாபாத்திரங்களில் நடிக்க துவங்கினார்.
3, மெரினா மாதிரியான படங்களில் நடித்தாலும் கூட அவருக்கு வரவேற்பை பெற்று தந்த திரைப்படமாக மனம் கொத்தி பறவை திரைப்படம்தான் இருந்தது. மனம் கொத்தி பறவை திரைப்படத்திற்கு பிறகு தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற்றார் எஸ்.கே
சமீபத்தில் அவர் நடித்த அமரன் திரைப்படம் அவரை வேறு கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது. அதுவரை காமெடி கதாநாயகனாக இருந்த சிவகார்த்திகேயன் அமரன் திரைப்படத்திற்கு பிறகு விஜய் அஜித் போலவே ஆக்ஷன் கதாநாயகனாக மாறியுள்ளார்.
மேலும் தொடர்ந்து தமிழில் பிரபல இயக்குனர்களான சுதா கொங்காரா, ஏ.ஆர் முருகதாஸ் போன்ற இயக்குனர்கள் படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் எவ்வளவு வளர்ந்து வந்தாலும் சிவகார்த்திகேயன் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பதில்லை.
இந்த நிலையில் இதுக்குறித்து அவர் ஒரு பேட்டியில் கூறும்போது சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதை நான் விட்டு 2 வருடங்கள் ஆகின்றன. இதற்கு பிறகுதான் மனது நிம்மதியாக இருக்கிறது. தெளிவாக ஒரு முடிவை எடுக்க முடிகிறது என கூறியுள்ளார் சிவகார்த்திகேயன்.
