தியேட்டர்ல அந்த விஷயம் பத்தி எல்லாம் ஒண்ணுமே தெரியாது.. ஆடிபோன ஹிப் ஹாப் ஆதி.. உதவி செய்த சுந்தர் சி.!

ஆல்பம் பாடல்களுக்கு இசையமைத்து அதன் மூலமாக மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று சினிமாவிற்கு வந்தவர் நடிகர் ஹிப் ஹாப் ஆதி. இயக்குனர் சுந்தர் சி மூலமாக வாய்ப்பை பெற்று இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் இவர் அறிமுகமானார்.

இவர் இசையமைத்த திரைப்படங்களின் பாடல்கள் நல்ல வெற்றியை கொடுத்தன. ஆனால் ஒரு காலகட்டத்திற்கு பிறகு கதாநாயகனாக நடிக்க ஆசைப்பட்டார் ஹிப் ஹாப் ஆதி.

அப்படியாக அவர் நடித்த திரைப்படம்தான் மீசைய முறுக்கு. மீசைய முறுக்கு திரைப்படத்தில் நடித்த பொழுது திரைப்படத் துறை சார்ந்து பல விஷயங்கள் தெரியாமல் இருந்தார். அதில் அவர் கூறும்போது மீசைய முறுக்கு திரைப்படம் வெளியான அதே சமயத்தில்தான் விக்ரம் வேதா திரைப்படமும் வெளியானது.

Social Media Bar

இதனால் எங்கள் படத்திற்கு திரையரங்குகள் கிடைக்காது என்று கூறினார்கள் எனக்கு அப்பொழுதெல்லாம் அதைப்பற்றி தெரியாது. படம் வெளியாகிறது என்றால் எல்லா படத்திற்குமே திரையரங்குகள் கிடைக்கும் என்று நினைத்திருந்தேன்.

ஆனால் 120க்கும் குறைவான திரையரங்கில்தான் மீசைய முறுக்கு திரைப்படம் வெளியானது. ஆனால் அப்போது சுந்தர் சி சார் கூறினார் இந்த படம் நல்ல வெற்றியை உனக்கு பெற்று தரும் என்று கூறினார். அதேபோல முதல் நாள் இந்த படத்திற்கு வரவேற்பு கிடைத்தது.

மூன்றாவது நாள் திரையரங்குகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கூறினார். அதேபோல அதிகரித்தது. இப்படியாக முதல் திரைப்படத்தில் பணிபுரிந்த பொழுது எல்லா விதத்திலும் சுந்தர் சி தான் உதவினார் என்று அந்த விஷயத்தை பகிர்ந்து இருக்கிறார் ஹிப் ஹாப் ஆதி.