இந்த சீன் நல்லா இல்லை சார்! –  பாலச்சந்தரிடம் தகராறு செய்த பாட்ஷா இயக்குனர்!

பொதுவாக சினிமாவை பொறுத்தவரை அதில் படமாக்கப்படும் அனைத்து காட்சிகளும் திரைப்படத்தில் வராது. திரைப்படத்தின் நேரத்தை கணக்கிட்டு அதற்கு ஏற்றாற் போல பல காட்சிகள் அதில் நீக்கப்படும்.

அதிக நேரத்திற்கு படம் இருந்தால் அது மக்களுக்கு அலுப்பை ஏற்படுத்திவிடும் என்பதற்காக இந்த ஏற்பாடு. நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி ப்ளாக் பஸ்டர் தந்த திரைப்படம் அண்ணாமலை. இந்த படத்தை இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கினார்.

ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா படத்தையும் இவர்தான் இயக்கினார். இயக்குனர் பாலச்சந்தரிடம் இவர் உதவி இயக்குனராக பணிப்புரிந்தார். அண்ணாமலை படத்தில் 5 நிமிட காட்சிகள் அதிகமாக இருந்தது.

ஒரு சின்ன குற்றத்திற்காக அசோக் காவலர்களிடம் மாட்டிக்கொள்ள, அவரை காப்பாற்ற அண்ணாமலை நீதி மன்றத்தில் பேசும் நகைச்சுவையான காட்சி அது. அந்த காட்சியை படத்தில் இருந்து நீக்கிவிடலாம் அதனால் படத்திற்கு எந்த பாதகமும் வராது என முடிவெடுத்தார் சுரேஷ் கிருஷ்ணா.

ஆனால் அந்த காட்சி பாலச்சந்தருக்கு மிகவும் பிடித்திருந்தது. எனவே அந்த காட்சியை நீக்க வேண்டாம் என அவர் கூறினார். இறுதி முடிவு ரஜினியிடம் வந்தது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என சுரேஷ் கிருஷ்ணாவிடம் கேட்டார் ரஜினி. கதை ஓட்டத்திற்கு அந்த காட்சி தடையாக இருக்கிறது நீக்குவது நல்லது சார் என சுரேஷ் கிருஷ்ணா கூறியுள்ளார்.

சரி நீக்கிவிடுங்கள் என ரஜினியும் கூறினார். இதனால் அந்த காட்சியானது அண்ணாமலை படத்தில் இருந்து நீக்கப்பட்டது.

Refresh