கமலுக்கே நோ சொன்ன சின்னத்திரை பிரபலம்… வேற லெவல் கெத்தா இருக்கே!..

சினிமாவில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு நடிகர் பிரபலமாக இருப்பார்கள். பிரபலமாக இருப்பவர்களை சின்னத்திரையில் இருந்தாலும் எங்கிருந்தாலும் அவர்களை சினிமாவிற்குள் கொண்டு வந்து விடுவார்கள்.

இப்போதைய காலகட்டத்தில் எடுத்துக் கொண்டால் கூட யூடியூப், டிக் டாக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் பிரபலமாக இருப்பவர்களை சினிமா உள்ளே அழைத்துக் கொள்வதை பார்க்க முடியும் அப்படி 90ஸ் காலகட்டங்களிலும் நடந்துள்ளது.

Social Media Bar

90ஸ் காலகட்டங்களில் சன் டிவியில் மிகப் பிரபலமாக இருந்த ஒரு நிகழ்ச்சி பெப்சி உங்கள் சாய்ஸ், பெப்சி உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் பெப்சி உமா, பெப்சி உமாவிற்கு அப்பொழுது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்தது. சினிமா வரை பலமுறை நடிப்பதற்கு அழைத்தது .

இந்த சமயத்தில் சுந்தர் சி இயக்கத்தில் கமல் நடித்த அன்பே சிவம் திரைப்படம் தயாரானது. அன்பே சிவம் திரைப்படத்தில் கதாநாயகியாக யாரை நடிக்க வைக்கலாம் என்கிற பேச்சு அப்பொழுது சென்று கொண்டிருந்தது.

அப்பொழுது கமல்ஹாசன் ”பெப்சி உமா குறித்து மக்கள் மத்தியில் அதிக பேச்சுக்கள் இருக்கின்றன அவர்கள் நம் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தால் படத்திற்கு அது அதிக வரவேற்பை ஏற்படுத்திக் கொடுக்கும் மக்களும் அதிகமாக திரையரங்கிற்கு வருவதற்கான வாய்ப்புகள் இருக்கும்” என கூறியுள்ளார்.

இதனை அடுத்து பெப்சி உமாவை நேரில் சந்தித்து அவரிடம் படத்தில் நடிப்பது குறித்து பேசி உள்ளனர் படக் குழுவினர். ஆனால் பெப்சி உமா நேரடியாக அதை மறுத்துள்ளார் அதுக்கு பெப்சி உமா பதிலளிக்கும் பொழுது ”எனக்கு சினிமா மீது ஆர்வம் கிடையாது நான் தொகுப்பாளராக மட்டுமே இருக்கவே ஆசைப்படுகிறேன். எனவே தயவு செய்து என்னை சினிமாவிற்கு அழைக்காதீர்கள்” என கூறியுள்ளார்.

அப்போதைய காலகட்டங்களில் சினிமாவில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைப்பது என்பது பெரும் விஷயமாக பார்க்கப்பட்டது. ஆனாலும் பலமுறை அந்த வாய்ப்புகள் தன் வீடு தேடி வந்தும் அதை நிராகரித்துள்ளார் பெப்சி உமா.