Connect with us

குணா மாதிரியே தாமதமாக பிக் அப் ஆன சிவாஜி படம்!.. ரி ரிலீஸில் பயங்கர ஹிட்!. எந்த படம் தெரியுமா?

kamal sivaji ganesan

Cinema History

குணா மாதிரியே தாமதமாக பிக் அப் ஆன சிவாஜி படம்!.. ரி ரிலீஸில் பயங்கர ஹிட்!. எந்த படம் தெரியுமா?

Social Media Bar

Guna movie : மஞ்சுமல் பாய்ஸ் என்கிற மலையாள திரைப்படம் வெளிவந்த பிறகு வெகு நாட்களுக்கு பிறகு கமலஹாசனின் திரைப்படத்திற்கு ஒரு பெரிய அங்கீகாரம் கிடைத்திருக்கிறது என கூறலாம். ஆமாம் மஞ்சள் பாய்ஸ் திரைப்படத்தில் குணா படத்தின் காட்சிகளும் பாடல்களும் அதிகமாக பயன்படுத்தப்பட்டிருந்தன.

 அதனை தொடர்ந்து இப்போதைய தலைமுறையினர் குணா படத்தை மீண்டு பார்ப்பதற்கு ஆவல் காட்டி வருகின்றனர். ஆனால் குணா திரைப்படம் வெளியான சமயத்தில் பெரிதாக வரவேற்பை பெறவே இல்லை. அதன் பிறகு கமல் ரசிகர்களால் மிகவும் போற்றப்படும் ஒரு திரைப்படத்தில் முக்கியமான திரைப்படமாக குணா இருந்தது.

guna
guna

மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படத்தின் இயக்குனருக்கும் கூட இந்த திரைப்படம் பிடித்த படமாக இருந்தால் அதை தனது திரைப்படத்தில் பயன்படுத்தி இருந்தார். இந்த நிலையில் குணா திரைப்படம் திரும்பவும் ரிலீஸ் ஆக இருக்கிறது.

சிவாஜி படத்திலும் அதே சம்பவம்:

இந்த திரைப்படத்தை பார்ப்பதற்கு இப்போதைய தலைமுறை ஆர்வம் காட்டி வருகின்றனர் இதே மாதிரியான நிகழ்வு சிவாஜிகணேசன் திரைப்படத்திலும் நடந்திருக்கிறது. இயக்குனர் எஸ் பாலச்சந்தர் இயக்கத்தில் சிவாஜி கணேசன் நடித்த திரைப்படம் அந்த நாள்.

அந்த திரைப்படம் துவங்கி ஐந்தாவது நிமிடத்திலேயே சிவாஜி கணேசன் இறந்துவிடுவார். சிவாஜி கணேசன் எப்படி இறந்தார் என்பதை கண்டுபிடிப்பதுதான் படத்தின் கதையாக இருக்கும். ஹாலிவுட் தரத்தில் உருவான இந்த திரைப்படம் வெளியான பொழுது பெரிதாக வரவேற்பை பெறவே இல்லை.

ஆனால் அதற்குப் பிறகு சிவாஜி கணேசன் ரசிகர்களால் வெகுவாக பாராட்டப்பட்ட ஒரு திரைப்படமாக அந்த நாள் திரைப்படம் இருந்தது. அதன் பிறகு மீண்டும் ரிலீசான பொழுது யாரும் எதிர்பார்க்காத அளவிற்கான ஒரு வெற்றியை அந்த நாள் திரைப்படம் கொடுத்தது. அந்த விஷயத்தில் சிவாஜி கணேசனுக்கும் கமலஹாசனுக்கும் ஒரே மாதிரியே இந்த நிகழ்வுகள் நடந்திருக்கின்றன.

To Top