Cinema History
என் வாழ்க்கையையே சீரிழிச்சாரு.. இருந்தாலும் அடுத்த பட வாய்ப்பு வாங்கி கொடுத்தேன்!.. மகிழ்திருமேனியால் காலியான தயாரிப்பாளர்!..
சினிமாவைப் பொறுத்தவரை கொடுத்தால் கொட்டி கொடுக்கும், எடுத்தால் மொத்தமாக எடுத்து விடும் எனக் கூறுவார்கள். பொதுவாக சன் பிக்சர்ஸ் லைக்கா மாதிரியான பெரிய நிறுவனங்களுக்கு ஒரு படம் தோல்வி படமாக அமைகிறது என்றால் அது ஒரு பெரிய நஷ்டம் இல்லை.
ஏனெனில் அவர்கள் நூற்றுக்கணக்கான கோடிகளில் பணத்தை போடுவார்கள். ஆனால் சின்ன தயாரிப்பாளர்களை பொருத்தவரை ஏதேனும் ஒரு படம் தோல்வியடைந்தால் அடுத்த படம் அவர்கள் படம் தயாரிப்பது என்பதே கேள்விக்குறியாகிவிடும்.
அப்படி பட தோல்விகளின் காரணமாக சினிமாவில் பணத்தை இழந்தவர் தான் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன். மாணிக்கம் நாராயணன் வேட்டையாடு விளையாடு மாதிரியான பல வெற்றி படங்களை தயாரித்துள்ளார்.
ஆனால் அவர் தோல்வி அடைவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் இயக்குனர் மகிழ்திருமேனி. இது குறித்து அவர் பேட்டியில் கூறும் பொழுது மகிழ் திருமேணி இயக்கிய முன்தினம் பார்த்தேனே என்கிற திரைப்படத்தை நான் தயாரித்தேன். அந்த திரைப்படத்தை மொத்தம் 110 நாட்கள் எடுத்தார் மகிழ்திருமேனி.
அந்தப் படத்தின் கடைசி அவுட்புட்டை பார்த்த பொழுதே நான் கூறிவிட்டேன் அந்த படம் ஓடாது. அப்படி ஓடினால் எனது இரண்டு காதுகளை வெட்டிக் கொள்கிறேன் என்று, ஆனால் அது கண்டிப்பாக ஓடும் என்று மகிழ் திருமேணி கூறினார். அந்த படம் பயங்கரமான தோல்வியை கண்டது.
அப்போதும் கூட நான் அவரைப் பற்றி வெளியில் தவறாக கூறவில்லை ஏனெனில் அதற்கு அடுத்து அவர் இயக்கவிருந்த தடையற தாக்க திரைப்படத்தில் அருண் விஜய் நடிக்க இருந்தார். அவர் என்னிடம் வந்து மகிழ் திருமேனி படத்தில் நடிக்கலாமா என்று கேட்டார் அப்பொழுது நான் நினைத்திருந்தால் மகிழ் திருமேனியை பலி வாங்கியிருக்கலாம்.
ஆனால் நான் அப்படி செய்யவில்லை அவர் நல்ல இயக்குனர் என்றுதான் கூறினேன் என்று தனது பேட்டியில் ஆதங்கத்துடன் கூறியுள்ளார் மாணிக்கம் நாராயணன்.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்