Cinema History
வீரப்பன் கடத்துனதை அஜித் வாயாலயே சொல்ல வச்ச கவிஞர் வாலி!.. ரொம்ப டேஞ்சரான ஆளா இருப்பார் போல!..
Poet Vaali: ஒரு கவிஞன் நினைத்தால் எந்த ஒரு விஷயத்தையும் எப்படி வேண்டுமானாலும் வெளிப்படுத்த முடியும் என்பதை வாலி காட்டியுள்ளார் என்று கூறலாம்.
பொதுவாக கவிஞர்கள் சமகாலத்தில் நடக்கும் நிகழ்வுகளையும் மற்றும் பல விஷயங்களையும் தெரிந்து வைத்திருப்பார்கள். அதுதான் அவர்களுக்கு கவிதைகள் எழுதுவதற்கு உதவியாக இருக்கும். அந்த வகையில் கண்ணதாசனுக்கு பிறகு தமிழ் சினிமாவில் பெரும் பாடலாசிரியராக இருந்தவர் வாலி.
அவரும் தனது பாடல் வரிகளில் பல விஷயங்களை முன் வைத்திருக்கிறார் ஆனால் உன்னிப்பாக அவர்கள் கேட்டால் மட்டுமே நம்மால் அவர்கள் கூறும் விஷயங்களை அறிந்து கொள்ள முடியும்.
வாலி செய்த ட்ரிக்:
2000 களில் மிகவும் பெரிதாக பேசப்பட்ட செய்தி என்றால் வீரப்பன் கன்னட நடிகரான ராஜ்குமாரை கடத்தியதுதான். ராஜ்குமாரை கடத்திய வீரப்பன் ஒரு டேப் கேசட் மூலமாக சில கோரிக்கைகளை முன் வைத்தார். அதை நிறைவேற்றினால்தான் ராஜ்குமாரை விடுதலை செய்வேன் என்று கூறியிருந்தார்.
இந்த செய்தி அப்பொழுது பிரபலமாக இருந்த பொழுது தான் தீனா திரைப்படத்திற்கு பாடல் வரிகளை எழுதுவதற்கான வாய்ப்பு வாலிக்கு வந்தது. அதில் காதல் வெப்சைட் ஒன்று என்று துவங்கும் பாடலில் இந்த சமகால நிகழ்வை குறிக்கும் விதமாக சில வரிகளை சேர்த்து இருந்தார் வாலி.
அதில்
உந்தன் கண்கள் என்னை கடத்தி போக போக
சென்டிமீட்டர் தூதரும் இல்லை நீ கேசட் தருவதற்கில்லை
நான் தோற்றேன் உன்னிடம் என்னை ஓ ஓஹோ
ஐ லவ் யூ டேஞ்சரஸ்பேபி நான் என்றும் உன்னிடம்
கைதி நியூஸ் சேனல் சொல்லுமே செய்தி
என்கிற வரிகளை எழுதியிருந்தார். அதாவது அந்த நேரத்தில் வீரப்பனுக்கும் முதலமைச்சருக்கும் தூதுவராக இருந்தவர் நக்கீரன் கோபால் அதையும் குறிக்கும் விதமாக அந்த பாடல் வரிகளில் கூறியிருந்தார் வாலி. பலமுறை இந்தப் பாடலை கேட்டு இருந்தாலும் கூட பலருக்கும் இப்படி ஒரு அரசியலை வாலி அந்த பாடலில் பேசியிருக்கிறார் என்பது தெரியாது.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்