ரஜினி படத்துல அந்த சீன் வொர்க் அவுட் ஆகுமான்னு தெரியல!.. குஷ்புவை வைத்து டெஸ்ட் செய்த இயக்குனர்!.
தமிழில் அதிகமாக சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் ரஜினிகாந்த். பெரும்பாலும் ரஜினிகாந்த் திரைப்படங்கள் வெற்றி பெறும் காரணத்தாலேயே அப்போதெல்லாம் தொடர்ந்து ரஜினிக்கு வாய்ப்புகள் கொடுத்துள்ளனர்.
அதே சமயம் தனது திரைப்படங்களில் சிறப்பாக காமெடி செய்யக்கூடியவர் ரஜினிகாந்த். அவருடன் நடிக்கும் காமெடி நடிகர்களை விட ரஜினி சிறப்பாக காமெடி செய்வார். ஜனகராஜ், செந்தில் மாதிரியான நடிகர்களுடன் நடிக்கும்போது ரஜினிகாந்த் செய்த காமெடிகள் பலவும் சிறப்பாக இருப்பதை பார்க்க முடியும்.
இப்படியாக அண்ணாமலை திரைப்படத்திலும் மிகவும் பிரபலமான காமெடி காட்சிகள் இடம் பெற்றிருந்தன. அதில் பாம்பு காட்சி ஒன்று வரும். அண்ணாமலை பால் கொடுக்க வரும்போது குஷ்பு தங்கியிருக்கும் இடத்திற்குள் பாம்பு வந்துவிடும்.

அதை விரட்டும்போது குளியல் அறை வழியாக வெளியே சென்றுவிடும். அப்போது குஷ்பு அங்கு உடையில்லாமல் இருப்பதை பார்த்து பயந்துப்போன அண்ணாமலை என்ன சொல்வதாக வசனம் வைக்கலாம் என யோசித்தார் இயக்குனர். பொதுவாக அதிர்ச்சியான விஷயத்தை பார்த்தால் கடவுளே கடவுளே என்றுதான் கூறுவோம்.
ஆனால் அது ஒர்க் அவுட் ஆகுமா என தெரியவில்லை என யோசித்த இயக்குனர் அந்த விஷயத்தை ரஜினிகாந்திடம் மட்டும் கூறினார். படப்பிடிப்பு தளத்தில் யாரிடமும் கூறவில்லை. இந்த நிலையில் ரஜினிகாந்த் திடீரென அந்த காட்சியில் கடவுளே கடவுளே என கூறவும் மொத்த படப்பிடிப்பு தளமும் தன்னை அறியாமல் சிரித்துள்ளது.
நடிகை குஷ்புவும் சிரித்துள்ளார். அப்படி என்றால் மக்களும் சிரிப்பார்கள் என முடிவு செய்த இயக்குனர் அதை படத்தில் வைத்தார். அந்த படத்தில் அந்த காட்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.