Connect with us

கோலங்கள் 2 வருதா?.. சன் டிவி எடுத்த அதிரடி முடிவு..!

thiruselvam kolangal 2

News

கோலங்கள் 2 வருதா?.. சன் டிவி எடுத்த அதிரடி முடிவு..!

Social Media Bar

தமிழில் பிரபலமாக உள்ள சீரியல் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் திருச்செல்வம். இயக்குனர் திருச்செல்வம் பல வருடங்களாக சின்ன தொலைக்காட்சிகளில் டிவி தொடர்களை இயக்கி வருகிறார்.

அவரது தொடர்களுக்கு நிறைய வரவேற்புகள் இருந்து கொண்டே இருக்கிறது தொடர்ந்து சில நாடகங்களில் நடிக்கவும் செய்திருக்கிறார். பெரும்பாலும் திருச்செல்வம் இயக்கும் நாடகங்களில் பெண் கதாபாத்திரங்கள் முன்னேற்றம் குறித்துதான் கதை இருக்கும்.

திருசெல்வத்திறகு வரவேற்பு:

இதற்கு முன்பு அவர் இயக்கிய கோலங்கள் என்கிற நாடகம் பல வருடங்கள் ஓடி பெரும் வெற்றியை கொடுத்தது. சன் டிவியின் வரலாற்றிலேயே அதிக நாட்கள் ஓடிய நாடகமாக அப்போது கோலங்கள் இருந்தது. இந்த நிலையில் அதில் அபி என்கிற கதாபாத்திரத்தின் வளர்ச்சியை வைத்துதான் மொத்த கதையும் செல்லும்.

அதே போன்ற ஒரு கதை அமைப்போடுதான் தற்சமயம் எதிர்நீச்சல் என்கிற சீரியலை தொடங்கினார் திருச்செல்வம். கிட்டத்தட்ட ஏற்கனவே மூன்று வருடத்திற்கான கதையை எழுதிவிட்டுதான் அந்த சீரியலையே அவர் துவங்கினார்.

ஆனால் மிகக் குறுகிய காலத்திலேயே அந்த சீரியலை அவர் முடித்து விட்டார் ஏனெனில் நடிகர் மாரிமுத்து இறந்த பிறகு அந்த கதையின் போக்கில் நிறைய மாறிவிட்டதாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து எதிர்நீச்சல் சீரியலை பார்த்து வந்த ரசிகர்களுக்கு அதன் மீது அதிருப்தி ஏற்பட்ட காரணத்தினால் எதிர்நீச்சல் சீரியல் முடிக்கப்பட்டது.

அடுத்த நாடகத்திற்கு பேச்சுவார்த்தை:

ஆனால் இதற்கு சன் டிவி தரப்பில் இருந்தும் பிரச்சனை வந்ததாக கூறப்படுகிறது. அதனால்தான் இயக்குனர் மிக வேகமாக இதை முடித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இயக்குனர் திருச்செல்வத்திடம் மீண்டும் இன்னொரு நாடகம் இயக்குவது குறித்து சன் டிவி நிறுவனம் பேசி வருகிறதாம்.

ethir-neechal
ethir-neechal

இந்த நிலையில் கோலங்கள் நாடகத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குமாறு கேட்டு வருகின்றனர் சன் டிவி நிறுவனத்தினர். ஏனெனில் அப்பொழுது கோலங்கள் நாடகத்திற்கு அதிக வரவேற்பு இருந்தது ஆனால் அதே சமயம் எதிர்நீச்சல் சீரியலை இன்னும் தொடர்வதற்கு ஆவலுடன் இருக்கிறாராம் திருச்செல்வம். எனவே அது குறித்து வேறு டிவி சேனல்களிடம் அவர் பேசி வருகிறார் என்றும் பேச்சுக்கள் இருக்கின்றன.

To Top