
தற்சமயம் தமிழ் சினிமாவில் நயன்தாராவிற்கு பிறகு பெரும் நடிகை என்றால் அது த்ரிஷாவாகதான் இருக்க முடியும். அந்த அளவிற்கு த்ரிஷாவிற்கு மார்கெட் அதிகரித்துள்ளது.

குறிப்பாக பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் அவருடைய மார்க்கெட் மிகவும் அதிகரித்துள்ளது. அடுத்ததாக இவர் சிம்புவுடன் விண்ணை தாண்டி வருவாயா திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க உள்ளார்.
த்ரிஷா முன்பெல்லாம் நிறைய பேட்டி கொடுப்பது வழக்கம் அப்படியாக அவர் ஒரு பழைய பேட்டியில் பேசியிருந்தார். அதில் பல்வேறு விஷயங்களை பேசியிருந்தார். அப்போது அவரிடம் அஜித்,விஜய்,சூர்யா,ஆர்யா,சிம்பு,விஷால் ஆறு நடிகர்கள் பெயரை கூறி அந்த ஆறு பேரில் த்ரிஷாவை அதிகம் கவர்ந்த நபர் வாரியாக ஒன்றில் இருந்து ஆறு வரை வரிசைப்படுத்துமாறு கூறினர்.
அப்போது த்ரிஷா அஜித்,சூர்யா,விஜய்,விஷால்,ஆர்யா, சிம்பு என கூறினார். அவரை கவர்ந்த நடிகர்களில் அஜித்திற்கு முதல் இடமும் சிம்பு கடைசி இடத்தையும் கொடுத்தார் த்ரிஷா.