அந்த காமெடி படத்தில் நாந்தான் நடிக்க வேண்டியது? –  உண்மையை வெளியிட்ட உதயநிதி!

தமிழ் சினிமாவில் பெரும் தயாரிப்பாளராகவும் அதே சமயம் நடிகராகவும் இருந்து வருபவர் உதயநிதி ஸ்டாலின். தமிழ் சினிமாவில் மக்களிடையே பிரபலமாகும் அளவிற்கு சில படங்களில் நடித்துள்ளார்.

அவர் சந்தானத்தோடு நடித்த நகைச்சுவை படங்கள் பிரபலமானவை. தற்சமயம் அரசியலில் ஈடுப்பட்டுள்ளதால் உதயநிதி சினிமாவில் அவ்வளவாக நடிப்பதில்லை. ஆனால் தொடர்ந்து படங்களை வாங்கி வெளியிட்டு வருகிறார். அவ்வபோது சில சில படங்களில் நடித்து வருகிறார். தற்சமயம் அவர் நடித்து கலகத்தலைவன் என்கிற திரைப்படம் வெளியாகியுள்ளது.

இதற்கு முன்பு உதயநிதிக்கு வீட்ல விஷேசம் படத்தின் கதைதான் நடிப்பதற்கு வந்ததாம். ஆனால் இனி காமெடி திரைப்படங்கள் வேண்டாம் என்ற முடிவில் இருந்தாராம் உதயநிதி. அதனால் இந்த திரைப்படத்தில் நடிக்க முடியாது என கூறிவிட்டாராம் உதயநிதி. எனவே ஆர்.ஜே பாலாஜி அவரே நடித்து, இயக்கி இந்த படத்தை வெளியிட்டுள்ளார்.

அதே சமயம் நெஞ்சுக்கு நீதி கதையில் நடிக்க உதயநிதிக்கு வாய்ப்பு வந்தது. அந்த கதை தனக்கு ஏற்றப்படியாக உள்ளதால் உதயநிதி அதில் நடித்தார். அந்த படம் நல்ல வரவேற்பையும் பெற்றது.

Follow @ Google News: சினிபேட்டையில் வரும் அனைத்து சினிமா அப்டேட்களையும் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிபேட்டை தளத்தை ஃபாலோ செய்யவும்.

Refresh