கடைசி வரை அந்த படம் வராது!.. ரசிகர்களுக்கு குண்டை தூக்கி போட்ட வெற்றிமாறன்!.

வெற்றிமாறன் இயக்கும் பெரும்பாலான திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் வரவேற்பை பெற கூடியவை எனலாம். எப்போதுமே சிறப்பான கதையம்சத்தோடு வெற்றிமாறன் திரைப்படம் இயக்குவதே இதற்கு காரணமாகும்.

இந்த நிலையில் சமீபத்தில் இவர் இயக்கிய விடுதலை திரைப்படம் தமிழக அளவில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தியது. அந்த திரைப்படம் நடிகர் சூரிக்கும் முக்கியமான திரைப்படமாக அமைந்தது. இந்த நிலையில் அடுத்து வாடிவாசல் திரைப்படத்தை இயக்க இருக்கிறார் வெற்றிமாறன்.

இந்த திரைப்படம் கொஞ்சம் இழுப்பறியில் சென்று கொண்டுள்ளது. இந்த படத்திற்கு யார் கதாநாயகன் என்பதே இன்னும் தெரியவில்லை. முதலில் இந்த படத்தில் சூர்யா கதாநாயகனாக நடிக்க இருந்தார். ஆனால் அவர் தற்சமயம் இந்த படத்தில் இருந்து விலகிவிட்டார்.

vetrimaaran
vetrimaaran
Social Media Bar

இந்த நிலையில் வெகு நாட்களாக வெற்றிமாறன் இயக்கிய வடசென்னை படத்தின் இரண்டாம் பாகத்திற்காக காத்துகொண்டுள்ளனர் ரசிகர்கள். ஆனால் வெற்றிமாறனை பொறுத்தவரை அந்த படத்திற்கான பேச்சையே அவர் எடுப்பதில்லை எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் வெற்றிமாறனிடம் பேசிய ரசிகர் ஒருவர் கேட்கும்போது வடசென்னை 2 திரைப்படம் எப்போது வெளியாகும் என்கிற கேள்வியை எழுப்பினார். அதற்கு பதிலளித்த வெற்றிமாறன் கூறும்போது அடுத்து விடுதலை 2 எப்போது வெளியாகும் என்றே எனக்கு இன்னமும் தெரியவில்லை.

அதற்கு பிறகு வாடிவாசல் திரைப்படத்தை இயக்க வேண்டும். பிறகுதான் வடசென்னை 2 பற்றி பார்க்க வேண்டும் என கூறியுள்ளார். அட்லீஸ்ட் வடசென்னை 2 வருவதற்கு எத்தனை வருடங்களாவது ஆகும் என கூறுங்கள் என கேட்டப்போது அதற்கு பதிலளித்த வெற்றிமாறன் ‘நேரம் எடுக்கும்னு சொன்னாலே அவ்வளவுதான்’ என பேச்சை முடித்துவிட்டார்.

எனவே வட சென்னை 2 வருவதற்கு வாய்ப்புகள் இல்லை என்று கூறப்படுகிறது.