அஜித் இப்படி செய்வாருன்னு எதிர்பார்க்கல..! அதிர்ச்சியில் உறைந்து போன உதயநிதி…

Actor Ajith is one of the leading actors in Tamil cinema. For the past few years, there has been a problem in the release of his films. At this stage, there is an update about the film Vidamuyarchi in which he is acting

நடிகர் விஜய்க்கு பிறகு தமிழ் சினிமாவில் அதிகமான ரசிகர்களை கொண்ட ஒரு நடிகராக நடிகர் அஜித் இருந்து வருகிறார். ஆனாலும் கூட நடிகர் விஜய் அளவிற்கு அஜித் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருவது கிடையாது.

அதனால்தான் அவருக்கான சம்பளம் இன்னமுமே அதிகரிக்கவில்லை என்று ஒரு பக்கம் பேச்சுக்கள் இருந்து வருகின்றன. இந்த நிலையில் தொடர்ந்து அஜித் நடிக்கும் திரைப்படங்கள் வெளியாவதில் சிக்கல் ஏற்படுவது என்பது நடந்து கொண்டே இருக்கிறது.

வலிமை திரைப்படத்தில் இருந்தே இந்த பிரச்சனை இருந்து வருகிறது. அதே போல தற்சமயம் விடாமுயற்சி திரைப்படம் ஒரு வருட காலம் ஆன பிறகும் கூட இன்னமும் வெளியாகாமல் இருந்து வருகிறது. விடாமுயற்சி திரைப்படம் மீது மக்களுக்கு அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

Social Media Bar

விடாமுயற்சி திரைப்படம்:

ஏனெனில் இந்த திரைப்படத்தை இயக்கிய மகிழ் திருமேனி இயக்கிய மற்ற திரைப்படங்கள் நன்றாக இருந்தது என்பதால் ரசிகர்கள் விடாமுயற்சி திரைப்படமும் நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள். ஆனால் இந்த பொங்கலுக்கு அந்த திரைப்படம் வெளியாகும் என்று ஒரு விதமாக தகவல்கள் வந்திருக்கின்றன.

லைகா நிறுவனம்தான் இந்த திரைப்படத்தை தயாரித்து இருக்கிறது பொதுவாகவே லைக்கா தயாரிக்கும் திரைப்படங்களை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தான் திரையரங்குகளில் வெளியிடும். அந்த வகையில் உதயநிதி சமீபத்தில் விடாமுயற்சி திரைப்படத்தை பார்த்ததாக கூறப்படுகிறது.

அதனை பார்த்த உதயநிதி மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. எனவே இதுவரை பார்க்காத ஒரு விதத்தில் அஜித்தை இந்த திரைப்படத்தில் காண்பிப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் விடாமுயற்சி திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பு என்பது இன்னும் மிக அதிகரித்து இருக்கிறது.