Connect with us

சும்மா உக்காந்து இருக்குறதுக்கு 50 லட்சமா!.. விடாமுயற்சி படப்பிடிப்பு பரிதாபங்கள்!..

ajithkumar vidamuyarchi

News

சும்மா உக்காந்து இருக்குறதுக்கு 50 லட்சமா!.. விடாமுயற்சி படப்பிடிப்பு பரிதாபங்கள்!..

Social Media Bar

Vidamuyarchi Ajith : துணிவு திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு அடுத்த படத்தில் நடிக்காமல் உலகச் சுற்றுலா செல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டார் அஜித். அதனை அடுத்து ஒரு இடைவெளி எடுத்துக்கொண்டு தன்னுடைய இருசக்கர வாகனத்தில் பல நாடுகளையும் சுற்றி வந்தார் அஜித்.

சொல்ல போனால் நடிப்பை காட்டிலும் அஜித்திற்கு இப்படி பயணம் செல்வதில்தான் ஆர்வம் அதிகம் என்றாலும் தன்னுடைய தொழிலையும் கொஞ்சம் பார்க்க வேண்டும் என்பதற்காக அவ்வப்போது நடித்துக் கொண்டு வருகிறார்.

இதனால் சினிமாவில் இருக்கும் போட்டியில் இருந்து அஜித் விலகிவிட்டார் என்று கூறவேண்டும் ஏனெனில் இந்த இடைவெளியில் விஜய் லியோ திரைப்படத்தில் நடித்து அது வெளியாகி வெற்றியும் கொடுத்துவிட்டது. இந்த நிலையில் தற்சமயம் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார் அஜித்.

vidamuyarchi
vidamuyarchi

இந்த படம் பெரும் பட்ஜெட்டில் தயாராகி வருகிறது இந்த படத்தின் படப்பிடிப்பு துபாயில் நடந்து வருகிறது. 12ஆம் தேதி படப்பிடிப்பிற்காக அங்கு அனைவரும் சென்று விட்டனர். இருந்தாலும் படப்பிடிப்பு துவங்குவதில் சில பிரச்சனைகள் இருப்பதால் அங்கு சென்றவர்கள் அனைவரும் இன்னும் நடிக்க துவங்கவில்லையாம்.

இருந்தாலும் அவர்களுக்கான சம்பளம் மட்டும் கொடுக்கப்பட்டு வருகின்றன ஒரு நாளைக்கு செலவு மட்டும் 50 லட்சம் வரை ஆகிறது என்று கூறப்படுகிறது இது ஒரு படபிடிப்பிற்கான அதிகபட்ச செலவாகும். எனவே இந்த வேலையும் பார்க்காமலேயே அங்கு சென்ற நடிகர்கள் தினசரி சம்பளம் வாங்கி வருகின்றனர். இவ்வளவு செலவுகள் செய்து அந்த படம் வெற்றியை கொடுத்தாக வேண்டும் என்கிற சூழ்நிலை தற்சமயம் உருவாகியுள்ளது.

Articles

parle g
madampatty rangaraj
To Top