News
விக்னேஷ் சிவன் செயலால் சிக்கலில் மாட்டிய தயாரிப்பாளர் சங்கம்!.. ரெண்டு பேருக்கும் வந்த வக்கீல் நோட்டீஸ்..
Vignesh Shivan : பிரபலமான இயக்குனராக இருந்தும் தமிழ் சினிமாவில் வெகுகாலமாக திரைப்பட வாய்ப்பு எதுவும் கிடைக்காமல் இருக்கும் ஒரு இயக்குனராக விக்னேஷ் சிவன் இருந்து வருகிறார். இவர் ஒரு வருடம் முழுவதும் அஜித்திற்காக ஒரு கதையை எழுதினார்.
ஆனால் அவர் எழுதிய கதை அஜித்துக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை. ஒரு வருட கால காலத்தில் இதைவிட சிறப்பாக ஒரு கதை எழுதியிருக்க வேண்டும் என்பது அவரது மனநிலையாக இருந்தது. எனவே விக்னேஷ் சிவனுடன் அவர் படம் பண்ண வில்லை.
இந்த நிலையில் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த விக்னேஷ் சிவன் அடுத்ததாக எல்.ஐ.சி என்கிற ஒரு திரைப்படத்தை எடுக்க இருக்கிறார். இந்த திரைப்படத்தில் சீமான் நடிப்பதாக கூறப்பட்டுள்ளது. அரசியல் சார்ந்த ஒரு திரைப்படமாக இது இருக்கலாம் என்பது பலரது பேச்சுக்களாக இருக்கின்றன.

இந்த திரைப்படத்தின் காரணமாக தற்சமயம் விக்னேஷ் சிவன் மற்றும் தயாரிப்பாளர் சங்கம் இருவருக்கும் வக்கீல் நோட்டீஸ் வந்திருக்கிறது இதற்கு காரணம் விக்னேஷ் சிவன் தான் என்று கூறப்படுகிறது. எல்.ஐ.சி என்பது ஒரு நிறுவனத்தின் பெயர் என்பது பலரும் அறிந்த விஷயமே.
இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் பெயர் ஏற்கனவே தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்யப்பட்டு இருக்கிறதா என்று கேட்டிருந்தார் விக்னேஷ் சிவன். அவர்கள் அதை ஆய்வு செய்து சொல்வதற்கு முன்பாகவே எல்ஐசி என்கிற பெயரிலேயே படத்திற்கு பூஜையையும் போட்டு விட்டார் விக்னேஷ் சிவன்.
இந்த நிலையில் தங்களது நிறுவனத்தின் பெயரை எப்படி படத்தில் டைட்டிலாக பயன்படுத்துகிறீர்கள் என்று விளக்கம் கேட்டு தயாரிப்பாளர் சங்கம் மற்றும் விக்னேஷ் சிவன் இருவருக்குமே கோர்ட்டில் இருந்து எல்.ஐ.சி நிறுவனம் நோட்டிஸ் அனுப்பிள்ளது.
