ஷாருக்கான் படத்தோட காப்பியா இது?.. விஜய் ஆண்டனியின் ரோமியோ திரைப்படம் எப்படியிருக்கு?..

தமிழ் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வரும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஜய் ஆண்டனி. மிக அரிதாகவே இவர் காதல் கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அப்படி அவர் தேர்ந்தெடுத்து நடித்த திரைப்படம்தான் இன்று வெளியாகியிருக்கும் ரோமியோ திரைப்படம்.

இதில் மிர்னாளினி ரவி, யோகி பாபு, தலைவாசல் விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இயக்குனர் விநாயக் வைத்தியநாதன் இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

படத்தின் கதை:

இந்த படத்தின் கதையை பொறுத்தவரை கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் பிரச்சனையை வைத்துதான் கதை. கதாநாயகி மிர்னாளினி ரவிக்கு ஒரு நடிகை ஆக வேண்டும் என்பது லட்சியமாக இருக்கிறது. ஆனால் அவர்களது வீட்டில் அதற்கு ஒப்புக்கொள்ளாமல் அவருக்கு திருமணம் செய்ய நினைக்கின்றனர்.

Social Media Bar

அப்படியாக அவரை திருமணம் செய்யும் மாப்பிளையாக விஜய் ஆண்டனி இருக்கிறார். விஜய் ஆண்டனியை பொறுத்தவரை அவர் மிகவும் இன்னசண்டான கதாபாத்திரமாக இருக்கிறார். திருமணத்திற்கு பிறகு மிர்னாளினி ரவிக்கு விஜய் ஆண்டனியை சுத்தமாக பிடிக்காமல் இருக்கிறது.

இந்த நிலையில் மிர்னாளினி ரவியை மகிழ்ச்சிப்படுத்த அவரது ரசிகர் போல இவர் போனில் பேசி நடிக்கிறார். இதனையடுத்து அவர்கள் இடையே எப்படி இந்த உறவு சுமூகமாக போகிறது என்பதை வைத்து காமெடியாக திரைக்கதையை நகர்த்தியுள்ளனர்.

விமர்சனம்:

படத்தை ஒருவேளை ரொமான்ஸ் திரைப்படமாக எடுத்திருந்தால் அது விஜய் ஆண்டனிக்கு எந்த அளவிற்கு கை கொடுத்திருக்கும் என தெரியவில்லை. நல்ல வேளையாக காமெடி படமாக இயக்கி இருப்பதால் ஓரளவு ஒர்க் அவுட் ஆகியுள்ளது என்றே கூற வேண்டும்.

படத்தில் காமெடி காட்சிகள் ரசிக்கும் படியாக இருக்கிறது. ஆனால் படத்தின் முதல் பாதி கிட்டத்தட்ட ஷாருக்கான் நடிப்பில் வந்த ரப்னே பனாதி ஜோடி திரைப்படத்தின் சாயலில் இருந்தாலும் அடுத்த பாதியில் படத்தின் கதையில் மாற்றம் தெரிகிறது.

எண்டர்டெயின்மெண்டாக படத்தில் எந்த ஒரு குறையும் இல்லை. ஆனால் விஜய் ஆண்டனியின் வழக்கமான திரைப்படங்களான நான், சலீம், பிச்சைக்காரன் மாதிரியான படம் பார்த்த ரசிகர்களுக்கு இந்த படம் எந்த அளவிற்கு பிடிக்கும் என தெரியவில்லை.