Tamil Cinema News
எனக்கு பெரிய வெற்றியை கொடுத்தது அந்த தெலுங்கு படம்தான்.. விஜய் ஆண்டனிக்கு எதிர்பாராத வெற்றி..!
தொடர்ந்து தமிழ் சினிமாவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் விதமாக கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் நடிகை நடிகர் விஜய் ஆண்டனி.
அவர் நடிக்கும் படங்களில் சில படங்கள் அவருக்கு பெரிதாக வெற்றியை கொடுப்பதில்லை என்றாலும் கூட பெரும்பாலும் விஜய் ஆண்டனி நடிக்கும் திரைப்படங்கள் என்றாலே அது வித்தியாசமான கதையை கொண்டிருக்கும் என்கிற ஒரு கருத்து மக்கள் மத்தியில் நிலவி வருகிறது.
அதே மாதிரி அவர் நடித்த கோடியில் ஒருவன், பிச்சைக்காரன், நான், திமிரு புடிச்சவன் என்று அவர் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படமும் ஒவ்வொரு மாதிரியான கதைகளத்தை கொண்டிருப்பதை பார்க்க முடியும்.
பிச்சைக்காரன் திரைப்படம்:
இந்த நிலையில் அவர் நடித்த படத்தில் அதிக பிரபலமான திரைப்படம் பிச்சைக்காரன் திரைப்படம் ஆகும். இது குறித்து அவர் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். அதில் அவர் கூறும் பொழுது எனக்கு சுத்தமாக தெலுங்கே தெரியாது.
பிச்சைக்காரன் திரைப்படத்தின் வெற்றியை அடுத்து அதை தெலுங்கில் வெளியிடலாம் என்று முடிவு செய்தார்கள். அப்போது எனக்கு தெலுங்கு தெரியாது என்றாலும் வணக்கம் என்றால் தெலுங்கில் என்ன என்று மட்டும் கற்றுக் கொண்டு சென்று பேசிவிட்டு வந்தேன்.
ஆனால் அதற்கு பிறகு பிச்சைக்காரன் படம் தெலுங்கில் பெரிய வெற்றியை கொடுத்தது. அதாவது இதுவரை நான் நடித்த திரைப்படத்தில் அதிக வசூல் கொடுத்த படம் பிச்சைக்காரன் தெலுங்கு வெளியீடுதான் , சில நேரங்களில் பிரமோஷன் மட்டுமே படத்தின் வெற்றியை தேர்வு செய்வது கிடையாது படத்தின் கதையும் அதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்று கூறியிருக்கிறார் விஜய் ஆண்டனி.
