Tamil Cinema News
தேவையில்லாமல் வாயை விட்ட அஞ்சலி.. மேடையிலேயே பழி தீர்த்த விஜய் ஆண்டனி.!
அங்காடி தெரு, கற்றது தமிழ் மாதிரியான திரைப்படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அதிக வரவேற்பை பெற்றவர் நடிகை அஞ்சலி. பெரும்பாலும் நடிகைகள் தங்களது அழகை காட்டிதான் தமிழ் சினிமாவில் வாய்ப்புகளை பெற்று வந்துள்ளனர்.
சில நடிகைகள்தான் கருப்பாக இருந்தாலும் கூட தனிப்பட்ட நடிப்பை காட்டி அதன் மூலமாக வாய்ப்பை பெறுகின்றனர். அப்படியான நடிகைகளில் நடிகை அஞ்சலி மிக முக்கியமானவர். ஆனாலும் கூட அஞ்சலிக்கு உடல் எடை அதிகரித்த காரணத்தால் ஒரு கட்டத்திற்கு மேல் அவருக்கு வாய்ப்புகள் என்பது கிடைக்காமல் போனது.
இந்த நிலையில் 12 வருடங்களுக்கு முன்பு அவர் நடித்த மதகஜராஜா என்கிற திரைப்படம் தற்சமயம் திரையில் வெளியாகி அவருக்கு நல்ல வரவேற்பை ஏற்படுத்தி கொடுத்து வருகிறது.
இதுக்குறித்து மேடையில் பேசிய அஞ்சலி அதில் சிறப்பாக இசையமைத்த விஜய் ஆண்டனி குறித்து பேசாமல் விஷாலை புகழ்ந்து பேசியிருந்தார். விஷால் பாடிய ஒரு பாடலுக்காகவே மக்கள் இப்போது மதகஜராஜாவை பார்க்க செல்வதாக அவர் கூறினார்.
அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசிய விஜய் ஆண்டனி, “விஷால் பாடியதை கேட்டு கருநாடக இசையே ஸ்தம்பித்து விட்டது. ஒருவருக்கு கருநாடக சங்கீதம் கற்றுக்கொள்ள 3 வருடங்களாவது தேவைப்படும். ஆனால் விஷால் உடனே அந்த பாடலை பாடினார்.
இதற்காக விஷாலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்தால் எங்கள் பெயரை கூற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” இவ்வாறு பேசியிருந்தார் விஜய் ஆண்டனி.
