Connect with us

விஜய்க்கு போட்டியா விஜய் படமே வந்தா எப்புடி!.. காத்து வாங்கும் திரையரங்கம்!.

actor vijay

News

விஜய்க்கு போட்டியா விஜய் படமே வந்தா எப்புடி!.. காத்து வாங்கும் திரையரங்கம்!.

Social Media Bar

நடிகர் விஜய் தமிழில் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் முக்கியமானவர். லியோ திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து விஜய் நடித்து வரும் திரைப்படம் கோட். இந்த திரைப்படத்தின் முக்கால்வாசி படப்பிடிப்பு வேலைகள் முடிந்துவிட்டன. அடுத்து விஜய் எந்த இயக்குனர் திரைப்படத்தில் நடிக்க போகிறார் என்பதே இன்னும் சஸ்பென்சாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் விஜய்யின் திரைப்படம் மறுவெளியீடாகி மாஸ் ஹிட் கொடுத்து வருகிறது. 2004 ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றியை கொடுத்த கில்லி திரைப்படம்தான் அது. கடந்த 20 ஆம் தேதி வெளியான கில்லி திரைப்படம் முதல் நாளே எக்கச்சக்கமான வசூலை பெற்று கொடுத்தது.

முக்கால்வாசி 90ஸ் கிட்ஸ்களுக்கு கில்லி திரைப்படத்தை திரையரங்கில் பார்க்கும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்தி அவர்களின் கொண்டாட்டத்தை வெளிப்படுத்திவிட்டனர். உண்மையில் கில்லி திரைப்படம் விஜய்யை விடவும் அந்த படத்தின் இயக்குனர் தரணியால்தான் தனித்துவமாக தெரிகிறது.

ஏனெனில் இதே சமயத்தில் விஜய் நடித்த போக்கிரி திரைப்படமும் வெளியாகியிருக்கிறது. ஆனால் போக்கிரி திரைப்படத்திற்கு எந்த ஒரு கூட்டமும் வரவில்லை. சொல்லப்போனால் அந்த படம் வெளியானதே பலருக்கு தெரியாது எனலாம்.

மொத்தத்தில் குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படத்தின் வெற்றி என்ன என்பதை கில்லி காட்டிவிட்டது.

To Top