Connect with us

144 தடை போடும் ஏரியாவில் படப்பிடிப்பு… வேட்டி மடித்து கட்டி களத்தில் இறங்கிய விஜயகாந்த்!.. அவர்தான் கேப்டன்!..

vijayakanth manobala

Cinema History

144 தடை போடும் ஏரியாவில் படப்பிடிப்பு… வேட்டி மடித்து கட்டி களத்தில் இறங்கிய விஜயகாந்த்!.. அவர்தான் கேப்டன்!..

Social Media Bar

Actor Vijayakanth : நடிகர் விஜயகாந்துடன் ஒவ்வொரு பிரபலத்திற்கும் ஒவ்வொரு அனுபவம் இருக்கும். அப்படியே தனக்கு இருந்த அனுபவத்தை முன்பு ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார் நடிகரும் இயக்குனருமான மனோபாலா.

மனோபாலா தமிழில் படங்களை இயக்க நினைத்தபொழுது அவரிடம் ஒரு கதை இருந்தது. அந்த கதையை அவர் விஜயகாந்திடம் கூறினார் அப்பொழுது விஜயகாந்த் இந்த கதை நடிகர் மம்முட்டிக்கு நன்றாக இருக்கும் நீங்கள் அவரிடம் இந்த கதையை கூறுங்கள் என்று கூறினார்.

மம்முட்டிக்கும் அந்த கதை படித்திருந்தது ஆனால் தயாரிப்பாளர்கள் அந்த கதையில் விஜயகாந்த் தான் நடிக்க வேண்டும் என்று தீவிரமாக இருந்ததால் பிறகு அந்த படத்தில் விஜயகாந்தே நடித்தார். அந்த திரைப்படத்தின் பட பிடிப்பு நாகர்கோவிலில் எடுக்கப்பட இருந்தது.

vijayakanth-4
vijayakanth-4

அப்போது நாகர்கோவிலுக்கு சென்ற பொழுது அங்கே இரு தரப்பினருக்கு இடையே ஏற்கனவே சர்ச்சை இருந்தது. ஒரு பக்கம் கிறிஸ்துவ மக்கள் இன்னொரு பக்கம் குறிப்பிட்ட சாதியை சேர்ந்த ஒரு மக்கள் இருந்தனர். இவர்கள் இருவருக்கும் இடையே பிரச்சனை இருந்தது.

இது தெரியாத மனோபாலா அந்த குறிப்பிட்ட சாதிகள் வாழும் பகுதியில் கிறிஸ்தவர்களுக்கான ஒரு செட் போட்டு அதில் படப்பிடிப்பை நடத்தினார். இந்த விஷயம் அறிந்த அந்த கிறிஸ்தவர்கள் எதற்காக எங்கள் மத விஷயங்களை வைத்து இங்கு படம் எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று பிரச்சனை செய்ய துவங்கி விட்டனர்.

இதனால் இருதரப்பின் இடையே பிரச்சனை உருவானது படப்பிடிப்பு ஆட்களும் அதில் மாட்டிக்கொண்டனர். இந்த நிலையில் வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு உள்ளே இறங்கிய விஜயகாந்த் இரு தரப்பினரிடமும் சத்தம் போட்டார்.

vijayakanth-2
vijayakanth-2

உடனே அந்த இரு தரப்பு மக்களும் அமைதியானார்கள். பிறகு அவர்களிடம் பேசி சமாதானம் செய்து இருவரையும் அனுப்பி வைத்தார் விஜயகாந்த் அதன் பிறகு அங்கு வந்த போலீஸ் இங்கே பெரும் கலவரம் நடக்க இருப்பதால் நாங்களே இங்கு 144 தடை உத்தரவு போட இருக்கிறோம் இங்கு எதற்கு வந்த படப்பிடிப்பை நடத்துகிறீர்கள் என்று கூறி அனுப்பி வைத்திருக்கின்றனர். அவ்வளவு பெரிய கூட்டத்தையா சத்தம் போட்டு அமைதிப்படுத்தினார் விஜயகாந்த் என அதிர்ச்சியாகியுள்ளார் மனோபாலா. இந்த நிகழ்வை மனோபாலா அந்த பேட்டியில் பகிர்ந்து இருந்தார்.

Articles

parle g
madampatty rangaraj
To Top