Connect with us

நைட் 12 மணிக்கு வந்து என்கிட்ட டவுட் கேட்பாரு… பூவே உனக்காக படத்தில் நாகேஷ் குறித்த அனுபவம்.. பகிர்ந்த விக்ரமன்..!

Tamil Cinema News

நைட் 12 மணிக்கு வந்து என்கிட்ட டவுட் கேட்பாரு… பூவே உனக்காக படத்தில் நாகேஷ் குறித்த அனுபவம்.. பகிர்ந்த விக்ரமன்..!

Social Media Bar

தமிழ் சினிமாவில் வரிசையாக வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர்களில் இயக்குனர் விக்ரமன் முக்கியமானவர். இப்பொழுதும் இயக்குனர் விக்ரமனின் திரைப்படங்களுக்கு இருக்கும் வரவேற்பு என்பது குறையவே இல்லை.

வானத்தைப்போல சூரியவம்சம் மாதிரியான திரைப்படங்களை இன்னுமுமே தொலைக்காட்சிகளிலும் ஆன்லைனிலும் மக்கள் பார்த்து வருவதை பார்க்க முடியும்.

அந்த அளவிற்கு பார்த்தால் சலிக்காத அளவிற்கான திரைப்படம் பூவே உனக்காக முக்கியமான திரைப்படம். விஜய்யின் சினிமா வாழ்க்கையை மாற்றியதிலும் பூவே உனக்காக படத்தில் முக்கிய பங்குண்டு. அதற்கு முன்பு வரை பிளேபாய் மாதிரியான கதாபாத்திரங்களில் நடித்து வந்த விஜய்யை ஒரு காதல் கதாபாத்திரமாக மாற்றிய திரைப்படம் பூவே உனக்காக.

பூவே உனக்காக திரைப்படத்தில் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய நடிகர்களான நம்பியார் மற்றும் நாகேஷ்  இருவரும் நடித்திருந்தனர். அதில் நாகேஷோடு தனது அனுபவம் குறித்து விக்ரமன் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். அதில் விக்ரமன் கூறும் பொழுது ஒரு காட்சியில் நாகேஷின் ஸ்கூட்டர் பெட்ரோல் இல்லாமல் நின்றுவிடும்.

அந்த காட்சியை நாங்கள் எடுத்து முடித்த பிறகு ஏனோ நாகேஷுக்கு அந்த காட்சி சரியாக படவில்லை. அன்று இரவு 12 மணிக்கு எனது அறையின் கதவை தட்டினார். கதவை திறந்ததும் அந்த காட்சி நான் ஒழுங்காக நடிக்கவில்லை என்று நினைக்கிறேன் உனது முகமே அப்பொழுது வாட்டமாக இருந்தது என்று என்னிடம் கேட்டார்.

உடனே நான் அப்படியெல்லாம் இல்லை சார். அந்த காட்சி மிக நன்றாக வந்துள்ளது. திரையரங்குகளில் பார்க்கும்பொழுது உங்களுக்கு தெரியும் என்று கூறினேன். ஆனால் நாகேஷ் அதை ஒப்புக்கொள்ளவே இல்லை. அப்படி ஒரு சின்சியரான நடிகர் நாகேஷ் என்று அந்த விஷயத்தை பகிர்ந்து இருக்கிறார் விக்ரமன்.

To Top