Tamil Cinema News
கருப்பு படத்தை விஜய் நிராகரிக்க இதுதான் காரணம்..!
நடிகர் சூர்யா நடிப்பில் தற்சமயம் வெளியாகவிருக்கும் திரைப்படம் கருப்பு. இந்த திரைப்படத்தை இயக்குனர் ஆர்.ஜே பாலாஜி இயக்கி வருகிறார். ஆர்.ஜே பாலாஜி இயக்கும் முதல் ஆக்ஷன் திரைப்படமாக அமைந்துள்ளது கருப்பு திரைப்படம்.
ஆரம்பத்தில் ஆர்.ஜே பாலாஜி திரைப்படம் இயக்கும்போது காமெடி கதைகளைதான் தேர்ந்தெடுத்து இயக்கி வந்தார். இந்த நிலையில் ஆர் ஜே பாலாஜி சூர்யாவை வைத்து இயக்கும் படத்திற்கு கதைகளத்தை மாற்றி அமைத்தார்.
அந்த வகையில் அடுத்து ஆர் ஜே பாலாஜி இயக்கி வரும் கருப்பு திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு ஆக்ஷன் திரைப்படமாக உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்தின் கதையை ஆரம்பத்தில் இவர் விஜய்யிடம் கூறியதாக ஒரு கருத்து இருந்து வருகிறது.
ஆனால் விஜய் அடுத்து ஜனநாயகன் திரைப்படத்தில் கமிட்டான காரணத்தினால் இந்த திரைப்படத்தில் நடிக்க மறுத்துவிட்டார். அதற்கு பிறகு தான் இந்த கதை சூர்யாவிடம் வந்ததாக கூறப்படுகிறது. சூர்யாவும் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு நடித்துள்ளார்.
இந்த நிலையில் ஏற்கனவே ஆர் ஜே பாலாஜி இயக்கிய படங்கள் எல்லாமே அவருக்கு நல்ல வெற்றியை கொடுத்திருப்பதால் இந்த திரைப்படமும் வெற்றியை கொடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
