News
இதுக்கு இவ்வளவு பெரிய பிரச்சனையா!.. வீடியோவையே தூக்கிய இர்ஃபான்!..
கடந்த இரு தினங்களாகவே சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டான ஆளாக இருந்து வருகிறார் யூ ட்யூப்பர் இர்ஃபான். உணவு சம்மந்தமான விமர்சனங்களை அளித்து அதன் மூலமாக யூ ட்யூப்பில் பிரபலமானவர் இர்ஃபான்.
பிரபலமான பிறகு இர்ஃபான் மீது அதிகமாக குற்றச்சாட்டுகளும் வர துவங்கின. ஒரு கார் விபத்து குற்றத்தில் கூட இர்ஃபானின் பெயர் அடிப்பட்டது அனைவரும் அறிந்த விஷயமே. இந்த நிலையில் இர்ஃபானுக்கு திருமணம் ஆன பிறகு ஜோடிகள் சேர்ந்து வீடியோ போடுவது போல இவரும் வீடியோ போட துவங்கினார்.

இந்த நிலையில் இன்னும் கொஞ்சம் ஹை லைட்டாக போய் சமீபத்தில் வெளிநாட்டிற்கு சென்ற இர்ஃபான் அங்கு தனக்கு பிறக்க போகும் குழந்தை ஆண் குழந்தையா அல்லது பெண் குழந்தையா என்பதை கண்டறியும் டெஸ்டை எடுத்தார்.
மேலும் தனக்கு பிறக்கும் குழந்தை என்ன பாலினம் என்பதை வீடியோவாகவும் வெளியிட்டார். ஆனால் இந்திய சட்டப்படி குழந்தை பிறக்கும் முன்பே அது ஆணா பெண்ணா என்பதை பார்ப்பது தவறு என்பதால் இதுக்குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மருத்துவத்துறையில் இருந்து குரல் எழுந்தது.
இதனையடுத்து இன்று இர்ஃபான் பேசு பொருளானார். இந்த நிலையில் அவர் அந்த வீடியோவையே நீக்கியுள்ளார். ஆனாலும் அவர் மீது நடவடிக்கை எடுக்க படுமா படாதா என்பது இன்னும் தெரியாத விஷயமாகவே இருக்கிறது.
