ஏ.ஆர் ரகுமானுக்கு போட்டியாதான் சினிமாக்குள்ள வந்தேன்? –  தைரியமாக கூறிய யுவன் சங்கர் ராஜா

தமிழ் சினிமாவில் மாபெரும் இசை சிகரங்களாக இருப்பவர்கள்தான் ஏ.ஆர் ரகுமானும், யுவன் சங்கர் ராஜாவும்.

யுவன் சங்கர் ராஜா இசையமைப்பாளர் இளையராஜாவின் மகன் என்பது பலருக்கும் தெரியும். அவர் இளையராஜாவால்தான் சினிமாவிற்கு வந்ததாக நாம் நினைத்துக்கொண்டிருப்போம்.

ஆனால் உண்மையில் ஏ.ஆர் ரகுமானால்தான் யுவன் சினிமாவிற்கு இசையமைக்க வந்தாராம். முதலில் ஒரு விமான ஓட்டியாக ஆக வேண்டும் என்பதுதான் யுவன் சங்கர் ராஜாவின் ஆசையாக இருந்ததாம். அந்த சமயத்தில்தான் ஏ.ஆர் ரகுமான் சினிமாவிற்குள் வந்தார்.

ஏ.ஆர் ரகுமானின் இசை முற்றிலும் மாறுப்பட்ட ஒரு இசையாக இருந்ததால் பலரும் ஏ.ஆர் ரகுமானுக்கு ரசிகராகி வந்தனராம். அப்போது யுவனிடம் பேசிய உறவினர் ஒருவர் “உங்க அப்பா காலம் முடிந்தது. இனிமே ஏ.ஆர் ரகுமான் தான், என கூறியுள்ளார்.”

இந்த விஷயம் யுவன் சங்கர் ராஜாவிற்கு அதிர்ச்சியாக இருந்துள்ளது. இந்நிலையில் ஒரு மாறுப்பட்ட இசை மூலம் நாமும் சினிமாவிற்குள் நுழைந்து தந்தையின் பெயரை காப்பாற்ற வேண்டும் என முடிவெடுத்த யுவன் சங்கர் ராஜா, ஏ.ஆர் ரகுமானுக்கு போட்டியாக சினிமாவிற்குள் இறங்கினார்.

தற்சமயம் ஏ.ஆர் ரகுமானுக்கு இணையான ஒரு இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Refresh