மனசுல நம்பிக்கை இருந்தால் யார் சொல்றதையும் கேட்க தேவையில்ல!.. பத்திரிக்கைகளை தாக்கி பேசுகிறாரா விஜய் ஆண்டனி!..

Vijay Antony : ஒரு இசையமைப்பாளராகவும் நடிகராகவும் தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்து கொண்டவர் விஜய் ஆண்டனி. முதல் முதலாக சுக்கிரன் என்கிற திரைப்படம் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமானார் விஜய் ஆண்டனி.

சுக்கிரன் திரைப்படத்தில் பெரிதாக பாடல்கள் வெற்றி தரவில்லை என்றாலும் அதற்கு பிறகு அவர் இசையமைத்த டிஷ்யூம் திரைப்படம் தமிழ்நாட்டில் பெரிய அலையை ஏற்படுத்தியது என கூறலாம்.

அந்த அளவிற்கு அது பெரும் வரவேற்பை பெற்றது. பிறகு விஜய் ஆண்டனியின் அதிக திரைப்படங்களில் பாடல்கள் பெரும் வெற்றியை கொடுத்தன. அதில் வேட்டைக்காரன், நான் அவன் இல்லை போன்ற படங்கள் அதிக வெற்றியை கொடுத்த படங்கள் என்று கூறலாம்.

vijay-antony
vijay-antony
Social Media Bar

அதன்பிறகுதான் விஜய் ஆண்டனி ஒரு நடிகராக களம் இறங்கினார் நடிகராகவும் அவரது திரைப்படங்களுக்கு அதிக வரவேற்பு உண்டானது அதில் பிச்சைக்காரன், நான் போன்ற திரைப்படங்கள் முக்கியமானவை இந்த நிலையில் தற்சமயம் விழா ஒன்றில் பேசியிருக்கும் விஜய் ஆண்டனி மனதில் நம்பிக்கை இருப்பவர்கள் சுற்றி இருப்பவர்கள் சொல்லும் பேச்சை கேட்க தேவையில்லை.

அவர்கள் பேசும்போதெல்லாம் நமக்கு காது கேட்காமல் இருப்பதே நல்லது என்று கூறி இருக்கிறார். சமீபத்தில் விஜய் ஆண்டனியின் மகளின் இறப்பின்போது அப்பொழுது பத்திரிகைகள் பலவும் அதை செய்தியாக்கும் பொழுது பல சர்ச்சைகளை கிளப்பி இருந்தன ஆனால் அது எதையுமே விஜய் ஆண்டனி கண்டு கொள்ளவில்லை. அதை குறிக்கும் விதத்தில் தான் அவர் அந்த விழாவில் அப்படி பேசி இருக்கிறார் என்று கூறப்படுகிறது.