சூப்பர் டூப்பர் படமா இருந்தாலும் என் விதிமுறைகளுக்குள்ள இல்லன்னா நடிக்க மாட்டேன்!. ஜெயம் ரவிக்கு இருக்கும் ரூல்ஸ் என்ன தெரியுமா?

Jayam Ravi: சமீபத்தில் ஜெயம் ரவி நடித்து வரும் திரைப்படங்கள் எல்லாம் பெரிதாக வெற்றியை அடையவில்லை. அவர் நடித்த திரைப்படங்களில் பொன்னியின் செல்வன் திரைப்படம் மட்டுமே ஓரளவு பேசப்படும் திரைப்படமாக இருந்தது.

அதற்கு முன்பு நடித்த பூமி, இறைவன், அகிலன் தற்சமயம் நடித்த சைரன் என எந்த ஒரு திரைப்படமும் வெற்றி பெறவில்லை. ஜெயம் ரவி கதைகளை தேர்ந்தெடுப்பதில் பெரிதாக கவனம் செலுத்தாதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

jayam-ravi
Social Media Bar

இத்தனைக்கும் இதற்கு முன்பு சந்தோஷ் சுப்ரமணியம், சம்திங் சம்திங், தில்லாலங்கடி என்று வரிசையாக வெற்றி படங்களாக நடித்தவர் நடிகர் ஜெயம் ரவி. அப்படி இருந்தும் கூட இப்பொழுது அவருக்கு ஏன் வாய்ப்புகள் வருவதில்லை என கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த நிலையில் படம் தேர்ந்தெடுப்பது குறித்து ஜெயம் ரவி ஒரு பேட்டியில் கூறும் பொழுது சில விஷயங்களை பகிர்ந்து இருந்தார். அதில் அவர் கூறும் பொழுது ஒரு திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்கும் என்று தெரியாமல் நீங்கள் தவறவிட்ட கதைகள் எத்தனை என்று கேட்ட பொழுது தெரிந்தே நான் தவறவிட்ட கதைகளே உண்டு.

ஜெயம் ரவியின் விதிமுறை:

ஏனெனில் திரைப்படங்களை தேர்ந்தெடுப்பதில் எனக்கு சில விதிமுறைகள் உண்டு என்று கூறுகிறார் ஜெயம் ரவி. அதன்படி ஏற்கனவே ஒரு கதாநாயகர்களிடம் சொன்ன கதை என்னிடம் திரும்ப வந்தால் அதை தேர்ந்தெடுக்க மாட்டேன்.

அப்படியே என்னிடம் ஒரு கதை வந்தது. அந்த கதையை கேட்ட பொழுது எனக்கு தெரிந்து விட்டது அது மிகப்பெரும் வெற்றியை கொடுக்கக்கூடிய கதை என்று. ஆனால் ஏன் அந்த இயக்குனர் வேறு கதாநாயகனை விட்டு என்னிடம் இந்த கதையை கூறுகிறார் என்று கேட்ட பொழுது.

jayam-ravi
jayam-ravi

அந்த கதையை அவர் முன்பே ஒரு கதாநாயகனிடம் கூறியதும் பிறகு அவருக்கும் கதாநாயகனுக்கு ஈகோ பிரச்சனை ஆனதும் பிறகுதான் ஜெயம் ரவிக்கு தெரிந்துள்ளது. எனவே திரும்ப அந்த கதாநாயகனிடமே பேசி அவர் நடிப்பதுதான் சரி என்று கூறியிருக்கிறார் ஜெயம் ரவி.

எனவே அந்த படத்தின் வாய்ப்பை நானாகவே விட்டுக் கொடுத்து விட்டேன் என்று கூறுகிறார் ஜெயம் ரவி. எனவே எவ்வளவு பெரிய வெற்றி படமாக இருந்தாலும் வேறு கதாநாயகனிடம் கூறிவிட்டு என்னிடம் கொண்டு வந்தால் தகுந்த காரணம் இல்லாத பட்சத்தில் அதில் நான் நடிக்க மாட்டேன் என்று கூறுகிறார் ஜெயம் ரவி.