தமிழ் மக்கள் மத்தியில் அதிக அதிர்வலையை ஏற்படுத்திய முக்கியமான திரைப்படங்களில் விடுதலை திரைப்படமும் ஒன்று. நடிகர் சூரி முதன் முதலாக ஹீரோவாக அறிமுகமான இந்த திரைப்படம் தமிழ்நாட்டில் அதிக வரவேற்பை பெற்றது. மேலும் படம் வந்த சமயத்திலேயே வெகுவாக பேசப்பட்டது.
இந்த நிலையில் பாதியிலேயே விடுதலை படத்தின் முதல் பாகம் முடிந்திருந்தது. அதனை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் விஜய் சேதுபதியை கதாநாயகனாக வைத்து செல்லும் என்று பேச்சுக்கள் இருந்தன. ஆனால் வட சென்னை 2 போலவே இந்த படத்தின் இரண்டாம் பாகமும் வராமலேயே போய்விடுமோ என்கிற சந்தேகம் மக்கள் மத்தியில் இருந்து வந்தது.
ஆனால் முதல் பாகம் தயாரிப்பு வேலைகள் நடந்தப்போதே இரண்டாம் பாகத்திலும் முக்கால்வாசி வேலைகளை வெற்றிமாறன் முடித்துவிட்டதாக கூறப்பட்டது. அதற்கு தகுந்தாற் போல சர்வதேச திரைப்பட விழாக்களில் விடுதலை 2 திரைப்படம் ஒளிப்பரப்பானது.

இப்படியிருக்கும்போது ஏன் அந்த படம் இன்னும் தமிழில் வரவில்லை என்கிற கேள்வி பலருக்கும் இருந்தது. படத்தில் சேர்க்க வேண்டிய காட்சிகள் கொஞ்சம் இருப்பதாகவும் அதை சேர்த்த பிறகு விரைவில் படம் திரைக்கு வரும் என்றும் கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தற்சமயம் விடுதலை 2 படத்திற்கான படப்பிடிப்பு துவங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இன்னும் ஒரு மாதத்திலேயே படப்பிடிப்பை முடித்து படத்தை வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.