Ameer jaabar saadhik : நேற்று இயக்குனர் அமீர் வெளியிட்ட நோட்டீஸ் ஒன்று சமூக வலைதளங்களில் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. அதில் தன்னுடைய திரைப்படங்களை தயாரித்த தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் மீது போதைப்பொருள் கடத்தியது தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதற்கு பதில் அளிக்கும் விதமாக அமீர் வெளியிட்ட அறிக்கையில் குற்ற செயல்களில் எவர் ஈடுபட்டாலும் அவர்களுடன் தொடர்ந்து பணியாற்ற போவதில்லை என்று கூறியிருந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் 2000 கோடி மதிப்புள்ள போதை பொருட்கள் டெல்லி போதை பொருள் தடுப்பு பிரிவால் கைப்பற்றப்பட்டது. அந்த கடத்தலில் திமுகவை சேர்ந்த ஜாபர் சாதிக் என்பவருக்கு தொடர்பு இருப்பதாக கருதப்பட்டது. இதனை அடுத்து ஜாபர் சாதிக்கின் மயிலாப்பூரில் உள்ள வீட்டிலும் புரசைவாக்கத்தில் உள்ள அவரது நிறுவன அலுவலகத்திலும் டெல்லி போதை பொருள் தடுப்பு பிரிவிலிருந்து சம்மன் ஒன்று ஒட்டப்பட்டது.
அதன்படி டெல்லி போதை பொருள் தடுப்பு பிரிவினருக்கு ஜாபர் சாதிக் விளக்கம் அளிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டிருந்தது. அமீர் நடித்த மாயக்கண்ணாடி மற்றும் இறைவன் மிகப் பெரியவன் ஆகிய திரைப்படங்களை ஜாபர் சாதிக்தான் தயாரித்து வருகிறார்.
ஜாபர் சாதிக் பிரச்சனை
எனவே இந்த விஷயம் எல்லாம் அமீருக்கு ஏற்கனவே தெரிந்தும் அவர் ஜாபர் சாதிக்குடன் இணைந்து படத்தில் பணியாற்றி இருக்கிறார். மேலும் இந்த போதைப்பொருள் கடத்தலில் அவருக்கும் தொடர்பு இருக்கலாம் என்று நெட்டிசன்கள் புரளியை கிளப்பி வந்தனர்.
இந்த நிலையில் இதற்கு பதிலளிக்கும் விதமாகத்தான் இயக்குனர் அமீர் இப்படியான ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் வெற்றிமாறன் அமீர் மற்றும் ஜாபர் சாதிக் மூவரும் சேர்ந்து எடுத்த புகைப்படம் ஒன்று இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
அதை பிரபலப்படுத்துபவர்கள் கூறும் பொழுது முற்போக்கு என்று திரையில் பேசிவிட்டு நிஜ வாழ்க்கையில் இப்படி போதைப்பொருள் கடத்தல் எல்லாம் செய்திருக்கிறார்களே என்று ஆதாரமற்ற வதந்திகளை பரப்பி வருகின்றனர். ஆனால் அமிரோ அல்லது இயக்குனர் வெற்றி மாரனோ இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என்பதற்கு எந்தவித ஆதாரமும் கூறப்படவில்லை இருந்தாலும் மக்கள் மத்தியில் அவர்கள் குறித்து தவறான கருத்துக்கள் பரவி வருகின்றன.