Connect with us

நீங்க நல்லா மாட்டிக்கிட்டீங்க சரவணன், என்னையவே வச்சு செஞ்சாங்க!.. வார்னிங் கொடுத்த ரஜினிகாந்த்!..

rajini actor saravanan

Cinema History

நீங்க நல்லா மாட்டிக்கிட்டீங்க சரவணன், என்னையவே வச்சு செஞ்சாங்க!.. வார்னிங் கொடுத்த ரஜினிகாந்த்!..

Social Media Bar

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு நடிகர்களுக்கும் ஒரு புனைப்பெயர் இருக்கும். சிலருக்கு அந்த புனைப் பெயரே அவர்களது வாழ்க்கை முழுக்க பெயராக அமைந்துவிடும். உதாரணத்திற்கு ரஜினிகாந்தின் நிஜ பெயர் ரஜினிகாந்த் கிடையாது. அதேபோல நடிகர் சூர்யா இன்னும் பல நடிகர்கள் தங்களது பெயரை சினிமாவிற்கு ஏற்றார் போல் மாற்றி அமைத்துள்ளன.

ஆனால் சிலருக்கு படங்களில் உள்ள பட்டப்பெயர்களே பெயராக அமைந்துவிடும். உதாரணத்திற்கு முண்டாசுப்பட்டி திரைப்படத்தில் நடித்த நகைச்சுவை நடிகருக்கு முனீஸ்காந்த் என்கிற பெயரை படத்தில் வைத்திருந்தனர்.

ஆனால் பிறகு அவரது பெயரரே முனிஸ்காந்த் என்று ஆனது. இப்படியாக நடிகர் சரவணனுக்கும் பருத்திவீரன் படத்தில் சம்பவம் நடந்தது, பருத்திவீரன் படத்தில் அவரை சித்தப்பா என்றுதான் கார்த்தி அழைப்பார். அதிலிருந்து 17 வருடங்களாக தன்னை பார்ப்பவர்கள் எல்லாம் சித்தப்பா என்று அழைப்பதாக சரவணன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

அது மட்டுமன்றி இந்த விஷயத்தை முன்பே கணித்திருந்தார் ரஜினி. இது குறித்து ரஜினியே சரவணனிடம் பேசி உள்ளார். அவர் சரவணனிடம் பேசும் பொழுது இப்படித்தான் 16 வயதினிலே படத்தை முடித்த பிறகு என்னை பலரும் பரட்டை என்றே அழைத்து வந்தனர்.

எனக்கு அந்தப் பெயரை நீக்குவதற்கு பல வருடங்கள் தேவைப்பட்டது நீங்களும் நன்றாக மாட்டிக் கொண்டீர்கள் சரவணன், மக்கள் உங்களை வச்சு செய்ய போறாங்க என்று அப்போடே ரஜினி கூறியதாக சரவணன் பேட்டியில் கூறியிருந்தார்

To Top