News
மூன்று கடவுள்களை வணங்கும் விஷால்….கேலிக்கு உள்ளாகும் வீடியோக்கள் குறித்து உருக்கமான பதில்!
தமிழ் சினிமா உலகில் உள்ள முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் விஷால். பிரபல தயாரிப்பாளர் ஜி.கே ரெட்டியின் இரண்டாவது மகனான இவர், நடிகர் ஆவதற்கு முன்பே நடிகர் அர்ஜுனிடம் உதவி இயக்குனராக பணி புரிந்து இருந்தார். இவர் ஹீரோவாக நடித்த முதல் திரைப்படம் செல்லமே ஹிட் அடிக்க பின்ன்னர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து வருகிறார். சமீபத்தில் மார்க் ஆண்டனி என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார் அந்த படமும் ஹிட் அடித்துள்ளது.
மேலும், இவர் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் திரைப்படத் நடிகர் சங்கத் தலைவராகவும் இருந்து வந்தார். இந்த ஆண்டு நடந்த நடிகர் சங்க தேர்தலிலும் விஷால் அணி தான் மீண்டும் வெற்றி பெற்று இருக்கிறது. தமிழ் சினிமாவில் புரட்சி தளபதி என்றும் நடிகர் விஷாலை அழைக்கிறார்கள்.
இருந்தும், சமீப காலமாக விஷால் குறித்து பல கேலிகள் ஆளாக்கப்படுகின்றன. mgr பிறந்தநாளை முன்னிட்டு அனைவருடன் சேர்ந்து உணவு சாப்பிட்ட விஷால், சாப்பிடும் முன் சாமி கும்பிட, அப்போது அருகில் இருந்த யோகி பாபு கொடுத்த Reaction பெரும் வைரலானது.
இந்த நிலையில், ரத்னம் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் இது குறித்து ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்ப அதற்கு உருக்கமான ஒரு பதிலை அளித்துள்ளார் விஷால். அதாவது, தான் கழுத்தில் அணிந்திருந்த ஜீசஸ் மற்றும் சாமி மாலையை காண்பித்து பின்னர் கையில் அணிந்திருந்த பிரேஸ்லெட்டையும் காண்பித்து இது மூன்றும் சாமிதான். 10 வருடமாக செய்து கொண்டிருக்கிறேன்.

எனக்கு அல்லாவும் ஒன்றுதான் சாய்பாபாவும் ஒன்றுதான் ஜீசஸ்சும் ஒன்றுதான். நிறைய பேர் இது குறித்து என்னிடம் கேட்டார்கள் சமீபத்தில் கூட ஒரு பெண் என்னைப் போன்று செய்தது கட்டி வைரல் ஆகியுள்ளார். எனக்கு கேமரா தான் தெய்வம், அதுதான் எனக்கு சோறு போட்டது. கடவுளை நான் பார்த்தது கிடையாது, அந்த கேமரா தான் எனக்கு கடவுள் அந்த கேமரா முன்பு நான் வணங்கும் எல்லா தெய்வங்களும் ஒன்று என்று சொல்வது தான் என்னுடைய நோக்கம்என்று கூறியுள்ளார்.
