News
படங்களில் அந்த மாதிரி காட்சிகள் வர்றப்ப இப்படி பண்ணுவாங்க எங்கம்மா.. சிறுவயது நிகழ்வை போட்டுடைத்த லெட்சுமி மகள்!.
தமிழ் சினிமாவில் அறிமுகமான ஒரு சில காலங்கட்டங்களிலேயே நல்ல வரவேற்பை பெற்றவர் நடிகை ஐஸ்வர்யா. மூத்த நடிகை லட்சுமி மகளான ஐஸ்வர்யா தமிழ் சினிமாவில் நிறைய திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
ஆரம்பத்தில் கதாநாயகியாக நடித்தாலும் பிறகு தொடர்ந்து அவருக்கு கதாநாயகியாக நடிப்பதற்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. கதாநாயகியாக நடித்த காலகட்டங்களில் இவர் நடித்த ராசுக்குட்டி திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
ஐஸ்வர்யாவிற்கு வந்த வரவேற்பு:

தொடர்ந்து அதே போலவே நிறைய திரைப்படங்களில் நடித்தாலும் பிறகு வரவேற்பை இழந்தார் ஐஸ்வர்யா. இருந்தாலும் இப்போது வரை தமிழ் சினிமாவிலும் மற்ற மொழி சினிமாக்களிலும் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் ஐஸ்வர்யா.
இதனால் ஐஸ்வர்யாவை அனைவருக்கும் தெரியும் என்று கூறலாம். ஆனால் படங்களில் பெரிய கதாபாத்திரத்தில் அவரை பார்க்க முடியாது. இந்த நிலையில் சிறுவயது காலங்களில் நடிகை லட்சுமி அவர்களிடம் எவ்வளவு ஸ்ட்ரிக்ட் என்பதை குறித்து பேட்டியில் பேசியிருக்கிறார் லட்சுமி.
அம்மா ரொம்ப ஸ்ட்ரிக்ட்:
அதில் அவர் கூறும் பொழுது சிறுவயதுகளில் எல்லா திரைப்படங்களையும் எங்களது அம்மா எங்களை பார்க்க விட மாட்டார். சில குறிப்பிட்ட திரைப்படங்கள் மட்டும்தான் பார்ப்பதற்கு எங்களுக்கு அனுமதி உண்டு.

அந்த திரைப்படங்களிலும் கவர்ச்சி காட்சிகள் என்பது பெரிதாக இருக்காது எப்போதாவது ஒருமுறை புதிதாக ஏதும் படங்கள் வந்தால் போட்டு விடுவார்கள்.
அந்த திரைப்படங்களிலும் கவர்ச்சி காட்சிகள் வந்துவிட்டால் உடனே எங்களை திரும்பிக்கொள்ள சொல்வார்கள் எங்களது அம்மா. பிறகு நாங்கள் திரும்பிக் கொண்ட பிறகு அந்த காட்சிகளை ஓட விட்டுவிட்டு பிறகு படத்தை போட்டு காண்பிப்பார் என்று கூறுகிறார் ஐஸ்வர்யா.
