Cinema History
சரத்குமார் மட்டுமில்ல இன்னொரு புள்ளியும் இருக்காங்க.. டார்ச்சர் தாங்காமல் தமிழ் சினிமாவை விட்டு சென்ற நடிகை..
தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ஒரு சில படங்களிலேயே மிகவும் பிரபலமானவர் நடிகை நக்மா. கவர்ச்சியில் அப்போது சினிமாவில் அதிகமாக ஸ்கோர் செய்துக்கொண்டிருந்த நடிகையாக நக்மா இருந்தார்.
பெருமளவில் மார்க்கெட் இருந்து வந்தாலும் கூட திடீரென சினிமாவில் இருந்து நக்மா விலகுவதற்கு தமிழில் உள்ள இரண்டு முக்கிய நடிகர்கள்தான் காரணம் என கூறப்படுகிறது. பெரும்பாலும் பாலிவுட்டில் நடிகர்களிடம் நிறைய பிரச்சனைகள் இருக்கும் என்றுதான் நடிகைகள் பலர் அங்கிருந்து இங்கு வந்து நடித்து கொண்டிருந்தனர்.
ஆனால் நடிகை நக்மாவிற்கு இங்கேயும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. சில காலங்களாக நடிகை நக்மாவிற்கும் நடிகர் சரத்குமாருக்கும் இடையே நட்பு இருந்து வந்துள்ளது. ஆனால் அதற்கு பிறகு சரத்குமார் நக்மாவை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
தொடர்ந்து வந்த பிரச்சனை:
இதனால் திரைப்படங்களில் நடிகர்களுடன் இவர் நெருங்கி நடிக்கும்போதெல்லாம் அப்படியெல்லாம் நடிகர்களோடு நெருங்கி நடிக்க கூடாது என கூறியுள்ளார் சரத்குமார்.
இதனால் கடுப்பான நக்மா நீங்க என்ன என் புருஷனா.. நண்பர் என்றால் அதோடு இருந்துக்கோங்க. நான் ஒரு நடிகை எனக்கு பிடிச்ச மாதிரிதான் நடிப்பேன் என கூறியுள்ளார் நக்மா.
இதே போல காதலன் திரைப்படத்திற்கு பிறகு நடிகர் பிரபுதேவாவும் கூட நக்மா மீது காதல் வயப்பட்டுள்ளார். அவரும் தொடர்ந்து நக்மாவிடம் இதுக்குறித்து பேசவே கொஞ்ச காலங்களில் அவரே சினிமாவை விட்டு விலகிவிட்டாராம்.