தமிழில் உள்ள முன்னணி நடிகர்களில் முக்கியமானவராக நடிகர் அஜித் இருந்து வருகிறார். நடிகர் அஜித்திற்கு என்று தனிப்பட்ட ரசிக கூட்டம் இருப்பதும் அவர் முன்னணி நடிகராக இருப்பதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. இந்த நிலையில் அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் குட் பேட் அக்லி.
இந்த திரைப்படம் கொடுத்த வெற்றியை அடுத்து அஜித் அடுத்த படத்தில் நடிப்பார் என்றே பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் அதற்கு நேர்மாறாக அவர் கார் ரேஸில் கவனம் செலுத்தி வருகிறார்.
கார் ரேஸ் இல்லாத காலங்களில் மட்டுமே திரைப்படங்களில் நடிக்க இருக்கிறார் அஜித். இந்த நிலையில் அவர் கார் ரேஸில் அதிக ஆர்வத்துடன் இருப்பதால் கார் ரேஸ் தொடர்பான திரைப்படத்தில் நடித்தால் நன்றாக இருக்கும் என்பது பலரது எண்ணமாக இருக்கிறது.
இதற்கு நடுவே சமீபத்தில் எஃப் 1 ரேஸ் என்கிற திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இந்த ஹாலிவுட் திரைப்படத்தின் போஸ்டரை எடுத்து அதில் அஜித்தின் முகத்தை மாற்றி வெளியிட்டு வந்தனர் ரசிகர்கள்.
இந்த புகைப்படங்கள் அதிக வைரலானது. இதனை தொடர்ந்து அஜித்திடம் ஃபாஸ்ட் அண்ட் ஃபுயிரியஸ் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நடிப்பீர்களா? என கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அஜித் கூறும்போது அவர்கள் வாய்ப்பு கொடுத்தால் நடிப்பேன் என கூறியுள்ளார்.